Subscribe

BREAKING NEWS

02 March 2018

அருட்குரு தேங்காய் சுவாமிகள் சித்தர் திருக்கோயில்


தேங்காய் சுவாமிகள் சித்தர் திருக்கோயில்  


புதுவையிலுள்ள மூலகுளம் பகுதியிலிருந்து சுவாமிகள் வந்ததாக கூறுவர்.மணவெளி கிராமத்திற்கு அருகிலுள்ள தண்டுகரை மேடு என்ற பகுதியில் சிறு குடிசை அமைத்து வசித்து வந்துள்ளார். அங்கு தீவிரமான ஆத்ம சாதனையில்  ஈடுபட்டிருந்தார்.பிரச்சனைகளால் பாதிக்கபட்ட மக்களுக்கு குறைகளை தீர்த்து வைத்துள்ளார்.

பக்தர்களை தேங்காயை கொண்டு வரச்செய்து அதை உடைத்து பார்ப்பாராம். தேங்காயினுள் நீல நிறத்தில் எழுத்துக்கள் தெரியுமாம். அதைப்படித்து பக்தர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்வாராம்.அதனாலேயே ”தேங்காய் சித்தர்” என்ற பெயர் வந்ததாம். பில்லி சூன்யம் –ஏவல் முதலியவற்றை விரட்டி அடிப்பாராம். பச்சிலை மூலிகைகளைக் கொண்டு கை தேர்ந்த வைத்தியம் செய்வாராம்.அவர் கை பட்டாலே நோய் பறந்து விடுமாம்.

சில ஆண்டுகளுக்கு பிறகு வில்லியனூரில் மரத்தடியில் அமர்ந்து முக்தி அடைந்து விட்டார்.அவருக்கு அங்கேயே சமாதி எழுப்பி வழிபாடு செய்து வருகின்றனர்.சுவாமிகளுக்கு தேங்காயை வைத்து வழிபட்டால் பிரச்சினைகள் தீரும் என்ற நம்பிக்கை இன்றளவும் உள்ளது. .




                                        சித்தர் பீடத்தின் முகப்புத் தோற்றம். 



 ஸ்ரீ தேங்காய் சுவாமிகளின் சித்தர் பீடம் புதுச்சேரியில் இருந்து வில்லியனூர் செல்லும் சாலையில், வில்லியனூர் துணை மின்நிலையத்தின் எதிரில் ஒரு சிறிய தகர கொட்டகையில் உள்ளது.

ஸ்ரீ தேங்காய் சுவாமிகளிடம் வரும் பக்தர்கள் தேங்காயுடன் வருவார்கள்.அதை அவர் உடைத்து அந்த மூடியின் உள்ளே வெள்ளை பகுதியில் இவர் கண்களுக்கு மட்டும் தெரியும் எழுத்துக்களை படித்து மக்கள் மனதில் உள்ளவற்றை கூறுவார். பின் அந்த மூடியின் ஒரு பகுதியை எடுத்து சென்று பூஜையில் வணங்க எல்லா துயரமும் போகுமாம்.

இதனால் இவரை தேங்காய் சுவாமிகள் என்று அழைத்தார்கள். ஒவ்வொரு மாதமும் முதல் திங்கள் கிழமை விசேஷ பூஜையும் செய்து சிறப்பித்து வருகிறார்கள்.



நம்மை வரவேற்கும் நுழைவுவாயில். நுழைவு வாயில் தாண்டி உள்ளே சென்றால் கோயிலின் வெளிப்பகுதியில் சித்தர்களின் தரிசனம் பெறலாம். அந்த வரிசையில் அகத்தியர்.
























சித்தர்களின் தரிசனம் ஒருங்கே பெற்றோம். அனைவரும் அருள் தரும் அழகில் சொக்கி போனோம். தரிசித்து விட்டு நேரே தேங்காய் சுவாமிகளை பார்த்தோம். சிறிது நேரம் அமைதியில் அமர்ந்தோம். நம்மை ஏதோஒன்று ஆற்றுப்படுத்துவதாய் தெரிந்தது. பறபறக்கும் சாலையில் கோயில் இருந்தாலும் சித்தர்களின் அருளில் அமைதியை உணர்ந்தோம்.







அப்படியே கோயிலின் மேலே பார்த்தோம். தேங்காய்கள் தொங்குவது போல் வடிவமைத்து இருந்தார்கள். இப்புண்ணிய பூமியில் நம்மை உயிர்ப்பித்து இருக்கும் கடவுளுக்கு நன்றி சொல்லிவிட்டு மனதார பிரார்த்தனை செய்து விட்டு, அடுத்த சித்தர் உயிர்நிலை கோயில் நோக்கி நகர்ந்தோம்.


மீள்பதிவாக :

சத்குரு ஸ்ரீ ராமபரதேசி சுவாமிகள் தரிசனம் பெறுவோம் - http://tut-temple.blogspot.in/2018/02/blog-post_15.html

No comments:

Post a Comment