Subscribe

BREAKING NEWS

05 March 2018

இயற்கை நல்வாழ்வியல் அறக்கட்டளை வழங்கும் இயற்கை நலவாழ்வியல் பயிற்சி (11/03/2018)


அன்பர்களுக்கு வணக்கம்.

இன்றைய பதிவில் இயற்கை நல்வாழ்வியல் அறக்கட்டளை சின்னமனூர் வழங்க இருக்கும் இயற்கை நலவாழ்வியல் பயிற்சி பற்றிய அறிவிப்பை தர இருக்கின்றோம். அதற்கு முன்பாக சில வார்த்தைகள்

இன்றைய கால கட்டத்தில் ஆன்மிகமும், ஆரோக்கியமும் பல நிலைகளில் பல்கி பெருகி வருகின்றது. ஆனால் இன்னும் நாமும் தினமும் தேடிக்கொண்டே இருக்கின்றோம். இயற்கையைத் தொலைத்து விட்டோம், வாழ்வியலைத் தொலைத்து விட்டோம். அப்படி என்றால் நாம் வாழ்வில்லையா? என்று கேள்வி கேட்டால், நாம் தினமும் வாழ்வதில்லை, பிழைத்துக் கொண்டிருக்கின்றோம். பிழைப்பு வேறு; வாழ்தல் வேறு ; இந்த பிழைப்பில் தினமும் செத்து,செத்து கொண்டிருக்கின்றோம் என்பதே உண்மை

உண்மையான ஆன்மிகமும் ஆரோக்கியமே. ஆரோக்கியம் நன்றாக இருந்தால் ஆன்மிகம் சிறக்கும். ஆனால் இன்று இவை இரண்டும் கேள்விக்குறியாகி, நம் சமூகத்தை பாழ்படுத்தி வருகின்றது. சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும். அந்த சுவரை பாதுகாத்தலே ஆரோக்கியம். இதனை தான் நம் திருமூலர் ஐயாவும்

உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே 

என்று செப்புகின்றார். இன்றைய கல்வியும் நம்மை வேறெங்கோ இட்டு சென்று விட்டது. வாழ்தலுக்கு உதவாத கல்வி இன்று நம்மை பிழைத்தலுக்கு இட்டு சென்றுள்ளது. அதனால் தான் படித்தால் போதும், கிடைத்த வேலையில் ஈடுபட்டு, மாதந்தோறும் ATM இயந்திரம் சென்று பணம் எடுத்து வாழ்ந்தால் போதும் என்ற நிலையில் நாம் வாழ்ந்து வருகின்றோம். நாம் பிழைப்பதே பெரும்பாடாய் இருக்கும் போது, பெற்றோராவது, குடும்பமாவது? கொடுக்கின்ற இன்பமாகிய குடும்பம் இன்று தன ஆணிவேரைத் தொலைத்து விட்டது, பெற்றோரோடு மாமா,அத்தை,சித்தப்பா,சித்தி,பெரியப்பா,பெரியம்மா, தாத்தா, பாட்டி என அனைவரும் தொலைந்து விட்டோம். இருவரொடு குழந்தைகளாக இன்று மாறிவிட்டோம். ஆனால் அந்த இருவராவது சந்தோசமாக உள்ளார்களா? என்றாலும் வெறும் வெற்றிடமே மிஞ்சுகின்றது. இப்படி நாம் பார்க்கும் அனைத்தும் நம்மை போலியான நிலையைத் தான் காட்டுகின்றது.

நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம் என்று பயத்தை வென்று வாழ்ந்து காட்டிய பரம்பரை நம் தமிழ் பரம்பரை. ஆனால் இன்று எதெற்கெடுத்தாலும் பயம். ஒருவன் ஆன்மீக நிலையின் உச்சத்தை அடைய வேண்டுமாயின் கைகொள்ள வேண்டிய பல விஷயங்களில் ஒன்று பயத்தை வெல்வது ஆகும். பெம்மானின் கடைக்கண் பார்வை இல்லாமல் சிறு புல்லை கூட அசைக்க வழியற்றவன் மனிதன் என்பது வெளிப்படை. ஆக பயத்தை வெல்வதும் அவனருளாலே முடியும். நாம் செய்ய வேண்டியது யாதெனின் அவன் பால் நம்பிக்கை. எம் தலையை பலவாக கொய்தாலும் பயம் கொள்ளோம். எம் தலைவன்,முதல்வன்,இறைவன்,உயிர்,ஊன் அனைத்துமானவன் இருக்கின்றான் என்ற நம்பிக்கை. மரணம் எவ்வழியில் வந்தாயினும் யாம் எவ்வாறு கொல்லப்படினும் எம்மை ஆட்கொள்ள பெம்மான் இருகின்றார் என்ற நம்பிக்கை. பயம் பூஜ்யமாக வேண்டும் என்றார் வள்ளலார் பெருமான் என்பர். எவ்வாறு பயத்தை  பூஜ்யம் ஆக்குவது. யாரிடமும் கேட்க வேண்டாம். தங்களுக்குளே எவ்வாறு என்று கேட்டு கொள்வோம். எல்லாமாய் இருந்து இயக்கும் எம்பெரும்மான் திருவடி தோன்றின் வேறு விளக்கம் யாரும் கூற வேண்டுமோ.


நமக்காக திருநாவுக்கரச பெருமான் அருளிய  பாடல் வரிகளை பார்த்தால் தெளிவு கொள்ளலாம்.

நாமார்க்கும் குடியல்லோம்; நமனை அஞ்சோம்;
நரகத்தில் இடர்ப்படோம்; நடலை இல்லோம்;
ஏமாப்போம்; பிணி அறியோம், பணிவோம் அல்லோம்;
இன்பமே எந்நாளும், துன்பமில்லை.


எம்பெருமான், பெம்மான், பொன்னர் மேனியன் இருக்கும் போது நாம் யாருக்கும் குடி அல்ல; அதாவது யாரும் எம்மைக் கட்டுப்படுத்தவோ, அத்து இடவோ முடியாது. நமனுக்கு அஞ்சமாட்டோம். அதாவது நமன்(யமதருமன்) எம்மிடத்து வரவே மாட்டார் என்பது இல்லை. எமன் வருவார். ஆயினும் யாம் அஞ்சமாட்டோம். எமக்கு மரணத்தைக் கண்டு அச்சமில்லை. சாகத் தயார். ஏனென்றால் எம்பெருமான், பெம்மான், பொன்னர் மேனியன் இருகின்றார்.

நரகத்தில் இடர்ப்படோம். அதாவது நரகத்திற்கு போக மாட்டோம் என்றில்லை. ஒருவேளை நரகத்திற்கே சென்றாலும் யாம் அங்கே இடர் பட மாட்டோம். ஏனெனில் சென்றவிடத்தைச் சொர்க்கமாய்ப் பாவிக்க எம் மனதிற்குத் தெரியும். ஏமாற மாட்டோம். பிணி அறியோம்.அதாவது, பிணியுற மாட்டோம் என்றில்லை, பிணியுற்றாலும், அதனால் துவண்டிட மாட்டோம். அடிபணிய மாட்டோம். எமக்கு என்றும், எப்போதும் துன்பம் என்பது கிடையாது.என்றும், எப்போதும், எந்நாளும் இன்பமே. ஏனென்றால் எம்பெருமான், பெம்மான், பொன்னர் மேனியன் இருகின்றார்.

வாழ்வின் நோக்கம் தான் என்ன? என்று கேட்டால் கூடுமானவரை மருத்துவமனை சென்று செத்துப் போகாது இருப்பதே. நாம் இந்த பூமிக்கு செய்யும் மிகப் பெரிய புண்ணியம் இதுவே ஆகும். இறத்தல்,செத்துப் போதல், மரணித்தல், உயிர் நீத்தல், இறைவனடி சேரல் என்று பல நிலைகளை தமிழ் மொழி காட்டும். ஆனால் ஆங்கிலத்தில் "death" மட்டுமே. வாழும் போது மருத்துவமனை செல்லாமல் வாழ முடியுமா? என்றால் நம் முன்னோர்கள் வாழ்ந்து காட்டியுளார்களே. சித்தர் பெருமக்கள் உள்ளார்கள். இவற்றையெல்லாம் படிப்பினையாக கொண்டு பார்த்தால், ஆன்மிகமும்,ஆரோக்கியமும் இன்று மறைபொருளாக உள்ளதோ என்று நமக்கு தோன்றுகின்றது.

வள்ளலார் போன்ற மகான்கள் இவற்றை தெளிவாக எடுத்துரைத்தாலும், நாம் இன்னும் அவர்களை படிக்காமல் தான் உள்ளோம். இது போன்ற மறைபொருளை வெளிக்காட்டும் விதமாக சின்னமனூரில் உள்ள இயற்கை நல்வாழ்வியல் அறக்கட்டளை மாதந்தோறும் இயற்கை நலவாழ்வியல் பயிற்சிகளை வழங்கி வருகின்றார்கள். நாம் நம் "தேடல் உள்ள தேனீக்களாய் " குழுவின் மூலம் "தமிழ் கூறும் நல்லுலகம் " என்ற சிந்தனை அரங்கம் ஒன்றையும் குருவருளால் நிகழ்த்தினோம்.

இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டால்,  ஆரோக்கியம் சார்ந்து நாம் எப்படியெல்லாம் தினமும் ஏமாற்றப்பட்டு வருகின்றோம் என்பது தெளிவாக புரியும். இயற்கை சார்ந்த உணவு முறைகள் பற்றியும், இயற்கை வாழ்வியல் முறைகள் பற்றியும் ஒரு புரிதலுக்கு நம்மால் வர இயலும். எனவே வாய்ப்புள்ள அன்பர்கள் வருகின்ற 11/3/2018 கூடுவாஞ்சேரி அறிவுத்திருக்கோயிலில் நடைபெற உள்ள இலவச இயற்கை நலவாழ்வியல் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு நமனை வெல்வோம் என்று உறுதி கூறுங்கள் என்று நம் குருமார்களிடம் வேண்டுகின்றோம். மேலும் விபரங்களுக்கு அழைப்பிதழை பார்க்கவும்.




மீள்பதிவாக :- 


தமிழ் கூறும் நல்லுலகம் -வருக ! வருக ! - http://tut-temple.blogspot.in/2017/12/blog-post_5.html

சதானந்த சுவாமிகள் ஆசிரமத்தில் தமிழ் கூறும் நல்லுலகம் - http://tut-temple.blogspot.in/2017/12/blog-post_26.html

மனமகிழ்ச்சி தந்திடும் மகம் பூசை - சதானந்த சுவாமிகள் ஆசிரமம் - http://tut-temple.blogspot.in/2018/01/blog-post_6.html

இனிதே நடைபெற்ற "தேடல் உள்ள தேனீக்களாய் (TUT)" இரண்டாம் ஆண்டு விழா - http://tut-temple.blogspot.in/2018/02/tut_20.html

No comments:

Post a Comment