அவசியம் - மாதம் ஒரு தெய்வீக சித்தர்கள் மலை தரிசன யாத்திரை குழு
அவசியம் ஆன்மிக சேவை அமைப்பு மதுரையை தலைமையிடமாக கொண்டு மாதம் ஒரு தெய்வீக சித்தர்கள் மலை யாத்திரை செய்து வருகின்றார்கள். மார்ச் மாதம் 24 & 25 விடுமுறை தினங்களில் 111 ஆவது யாத்திரையாக சென்னையில் உள்ள 35 சித்தர்களின் உயிர்நிலை கோயில்களை யாத்திரையாக ஏற்பாடு செய்து உள்ளார்கள். அழைப்பிதழை இந்த பதிவோடு இணைத்துள்ளோம். அழைப்பிதழில் தங்களுக்கு தேவையான தகவல்கள் உள்ளன. இரண்டு நாளில் 35 சித்தர்கள் யாத்திரை எனபது நமக்கு கிடைத்த நல் வாய்ப்பு. வாய்ப்பு உள்ள அன்பர்கள் கலந்து கொண்டு சித்தர்களின் அருள் பெற அன்போடு அழைக்கின்றோம்.
மலை யாத்திரை மட்டுமின்றி ஏகப்பட்ட சமுக பணிகள் செய்து வருகின்றார்கள். அவற்றைப் பற்றி இங்கே தொகுத்துள்ளோம்.
எல்லாம் வல்ல மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரரின் திருவருளாலும் எப்போதும் நல்வழி காட்டிடும் எங்கள் குருவருளாலும் அன்பே சிவமாய், அறிவே தவமாய் நம் முப்பாட்டன்களான சித்தர்களும், மகான்களும், ரிஷிகளும், முனிகளும், ஞானிகளும், நம் நலமான வளமான ஆரோக்கிய வாழ்விற்கும் தந்து சென்றவைகள் ஏராளம். நாம் அவர்களின் அடிசுவற்றை பின்பற்றும் சிறு தொண்டான சித்தர் மலை தரிசன யாத்திரைகள் அவர்கள் பணித்த பணியாக செய்துவருகிறோம். கடந்த 2005ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு அறக்கட்டளையாக முறையாக பதியப்பட்டு இதுவரை பதினோரு வருடங்கள் 101 மலை தரிசன யாத்திரைகள் மூலம் சித்தர்கள் தவமிருந்து அற்புத ஆற்றல்கள் பெற்ற 141 மலை ஆலயங்களும், 228 அற்புதம் அருளும் சிவ, வைணவ, அம்மன் ஆலயங்களும் 168 சித்தர்கள், மஹான்கள், ஜீவசமாதிகள் தரிசனங்கள் பெற்று மக்களை மகிழ்வித்திருக்கிறோம். இந்த பக்தி தொண்டுகளின்மூலம் மக்களை இணைத்து ஒற்றுமை உணர்வுடன், உதவியுடன் பல்வேறு சமுதாய சேவைகளையும் செய்துவருகிறோம்...மலையடிவார கிராம ஏழை மாணவர்களுக்கு படிப்பு, கல்வி உதவிகளும், மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள், ஆதரவற்றவர்கள் போன்றவர்களுக்கு அன்னதானம், ஆடை தானம், உபகரணங்கள் வழங்குதல், இயற்கையை பாதுகாக்க மரம் நடுதல், மலைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் அகற்றுதல், ஆலய உழவாரப்பணி, மற்றும் பக்தி தொண்டாக, பண்பாடு வளர்க்க ஆன்மீக சத்சங்கங்கள், திருவிளக்கு பூஜைகள், யாகங்கள், நிகழ்த்தி வருகிறோம். இறைவன் தந்த அருட்கொடையான இந்த அற்புத இயற்கையை போற்றி பராமரிக்கும் ஆற்றல்மிக்க அருட்பணியில்....அவசியம்
தீபாவளி கொண்டாட்டத்தில்
இந்து சமய ஆன்மிக கண்காட்சியில்
தீபாவளி கொண்டாட்டத்தில்..
இது ஒருபுறம் இருக்க, தமிழ்நாட்டில் எத்துணை மலைகள் உள்ளன என்றால் திருஅண்ணாமலை, பர்வதமலை, சதுரகிரி,வெள்ளியங்கிரி, பொதிகை மலை, அத்திரி மலை என்று நாம் விரல் விட்டு சொல்வோம். அத்தனையும் தாண்டி இதோ சித்தர்கள் அருளும் மலைகள் உங்களுக்காக.
சித்தர்களின் அழைப்பில் பிராப்தம் உள்ளவர்கள் தரிசிக்கும் ...
என்ன அன்பர்களே..தலை சுற்றுகின்றதா ? தமிழ்நாட்டில் மட்டுமே இத்தனை மலைகள்.
மலைகளில் சித்தர் பெருமக்கள்.
பதிவினை படிக்கும் அன்பர்கள் தங்களால் இயன்ற சேவையில் அவசியத்துடன் இணைந்து மேற்கொள்ளுங்கள்.
மீள்பதிவாக:-
9 ஆவது இந்து சமய சேவை கண்காட்சி - 2018 - http://tut-temple.blogspot.in/2018/02/9-2018.html
No comments:
Post a Comment