Subscribe

BREAKING NEWS

02 March 2018

பனைக்குளத்தில் சுடர்விட்ட ஆத்மஜோதி - தவத்திரு சித்திர முத்து அடிகளார் 23 ஆம் ஆண்டு குரு பூசை




வெற்றி 
ஸ்ரீ சித்திர முத்து தேவாய நம 

சிந்தையை திருத்தி நாளும் திருவருள் தந்த தேவா 
வந்து எனக்கு பாதம் அதை உளம் பதிய வைத்தாய் 
எந்தையே இனி நான் உன்னை ஐந்தர பிடித்தேன் அப்பா 
விதையாய் வாருங்கள் தந்து வினை தவிர் சித்திர முத்தே 



சித்திர முத்து அடிகளார்

சித்தர்கள் தமிழ் மரபின் விதிவிலக்குகள். விதி விலக்காக இருந்து நமக்கு வாழ்வியல் போதித்து வருபவர்கள். அறியா பயணத்தில் அன்பை உணர்த்துபவர்கள், பிழைத்தலில் பயணிக்கும் நம்மை வாழ்வியல் நோக்கி நகர்த்துபவர்கள். பொது வாழ்வு முறை, வழி முறைகளில் இருந்து வேறுபட்ட வாழ்வு, வழி முறைகளை உருவாக்கி சமூகத்துடன் ஒரு முரண்பாடான உறவு வைத்திருப்பவர்கள். ஆனால் நாம் அவர்களிடம் இருந்து முரண்பாட்டு உறவை விடுத்து , இயல்பான உறவுக்காக சிந்திக்கலாம். இப்படி பல மகான்கள் உள்ளனர். சிலர் தம்மை உலகிற்குக் காட்டி விட்டும் சிலர் காட்டாமலும் மறைந்துள்ளனர். மகான்கள் மக்களோடு வாழ்ந்து, சமயம் வரும் போது பூத உடலை உதறிவிட்டு மறைந்துவிடுகின்றனர். இப்படிப்பட்ட மகான்கள் பூத உடலோடு இருக்கும் போது யாரும் அவர்களை உணர்ந்து கொள்ள முடிவதில்லை. அவர்களுடைய மறைவுக்குப் பின்பு தான் அவர்களுடையப் பெருமைகள் உலகிற்கு வெளிப்படுகின்றது. அப்படி தன்னை வெளிக்காட்டியவர்களுள்   ஒருவர் தவத்திரு சித்திர முத்து அடிகளார் ஆவார். அவரைப் பற்றி நமக்கு கிடைத்த தகவல்களை இங்கே அறியத் தருகின்றோம். வழக்கம் போல் பதிவின் இறுதியில் 23 ஆம் ஆண்டு குரு பூசை அழைப்பிதழ் இணைத்துள்ளோம். 

ராமநாதபுரத்தில் உள்ள பனைக்குளத்தில் சுவாமிகள் 1900 ம் ஆண்டு அவதரித்தார்.  சுவாமிகள் எட்டு மாத  குழந்தையையாய் இருந்த போது, அவரது தாயார் இவுலகை விட்டு மறைந்தார். தாயின் மறைவுக்கு பின்னர் பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்தார். அதுவும் நீண்ட காலம் நிலைக்க வில்லை. சுவாமிகளின் ஆறாம் வயதில் அவரது பாட்டியும் இறைவனடி சேர்ந்தார். இதன் பின்னர் அவர்களது உறவு வழியில் சீனியாயிஅம்மாள் மற்றும் ராமாய்அம்மாள் கண்காணிப்பில் வளர்ந்தார்.

சுவாமிகளின் இளமைப் பருவம் சற்று கடினமாகவே இருந்தது. அவர்களது வளர்ப்புத்தாய் முத்துநாச்சி சுவாமிகளை துன்புறும் விதமாக நடத்தினார். அவரது பள்ளிப்படிப்புக்கு முற்றுப் புள்ளி வைத்தததோடு, அவரை அத்தியூத்தில் கள் இறக்கும்  தொழிலுக்கு செல்ல வைத்தார். இந்நிகழ்வின் போது சுவாமிகளுக்கு வயது 12.

சுவாமிகள் இளம்வயதில் போதிய உணவு, உறக்கம் இன்றி இருந்தார். ஒரு நாள் கள் இறக்க பனை மரம் ஏறும் போது, கை கால்களில்  பலத்த அடி பட்டது. ஓராண்டு காலம் படுக்கையிலேயே ஓய்வு எடுத்தார். உடல் நலம் பெற்றதும், ஆடு மாடு மேய்ச்சல் தொழிலுக்கு சென்றார்.சுவாமிகள் 1922 ஆம் ஆண்டு மலாயாவில், கோலா கங்சார் என்னும் இடத்தில் கள் இறக்கும் தொழிலை செய்தார்.பிறகு 1928-ஆம் ஆண்டில், மறுபடியும் தமிழகத்துக்கு திரும்பினார்.பின்னர் ஆலங்குளம் ஸ்ரீ காளையப்பா நாடாரின் மகள் சிவகாமி அம்மையாரை திருமணம் செய்து கொண்டார்.ஒரு குழந்தையும் பிறந்து, பிறகு சில வாரங்களில் அக்குழந்தை இறந்து விட்டது. அதன் பிறகு மீண்டும் மலாயாவிற்கு வந்தார். தைப்பிங் எனும் ஊரில் தங்கி, கள் இறக்கும் தொழிலை மறுபடியும் தொடங்கினார். 



முதுமைப் பருவத்தில்

சுவாமிகள் தென்காசியை சேர்ந்த இருசப்ப முதலியார் மூலம் ஜோதிடம் மற்றும் அறிவியல் கற்றார்.
அதன் பிறகு தவத்திரு ஜெகந்நாத் சுவாமிகளை காணும் வாய்ப்பு இவருக்கு கிட்டியது. சுவாமிகள் இவரை தன்னுடைய சீடனாக ஏற்றுகொண்டார்.  அதற்க்கு பிறகுதான் சித்திர முத்து அடிகள், அவருடைய வாழ்வின் நோக்கத்தை அறிந்து கொண்டார். மீண்டும் தமிழகத்துக்கு திரும்பினார். அப்போது சித்திர முத்து அடிகளுக்கும் அவர் துணைவியாருக்கும் ஒரு ஆன் குழந்தையும் பிறந்தது. அந்த குழந்தைக்கு தன் குருவான ஜெகந்நாத் சுவாமிகளின் பெயரை சூட்டினார் சித்திர முத்து அடிகள்.



                           
                                                             இறை அன்பர்களுடன்

மீண்டும் 1940ல் மலாயா வந்தார். இம்முறை சில யோகமுறைகளை மக்களிடையே பரப்பினார். காவி  உடுத்த ஆரம்பித்தார். தற்போது சுவாமிகள் ஆன்மிக வழிகாட்டியாக திகழ ஆரம்பித்தார். மலாயாவில் உள்ள இந்திய தேசிய ராணுவத்தில் சில பொறுப்பும் வகித்தார். இந்தியா சுதந்திரம் அடைந்த காலத்தில், 1947 இந்தியா வந்து சேர்ந்தார். சுவாமிகளைத் தேடி ஏகப்பட்ட அடியார் கூட்டம் வர ஆரம்பித்தது. குருவின் நிலைக்கு சுவாமிகள் உயர்த்தப்பட்டார்.
                                         

இந்தியாவில் ஜீவ காருண்யம் மற்றும் இராமலிங்க அடிகள் சொன்ன சுத்த சன்மார்க்கத்தின் கருத்துக்களை பரப்பினார். அவருடைய இல்லத்தை அருளொளி மடம் என்று பெயரிட்டு, ஆன்மிக சத்சங்கங்களை நடத்தலானார். இதன் பொருட்டு அருகில் உள்ள கிராமங்களுக்கு சென்று வந்தார். இன்றும் சுவாமிகள் பிறந்த ஊரில் உள்ள மக்கள் அசைவம் சாப்பிடுவது கிடையாது. ஓரிருவர் என்றால் கூட பரவாயில்லை. ஒட்டு மொத்த கிராமம் என்றால் சுவாமிகள் அருளின்றி வேறென்ன?

மீண்டும் 1951 ம் ஆண்டு மலேஷியா சென்றார். இம்முறை பற்பல ஆலயங்களுக்கு சென்று ஆன்மிக சத்சங்கங்கள் செய்யலானார். ஸ்ரீ தண்டாயுதபாணி கோயில், அருளொளி முருகன் கோயில், மகா மாரியம்மன் திருக்கோயில், பிள்ளையார் கோயில், கந்தசாமி கோயில், ஆதி ஈஸ்வரன் கோயில், ஸ்ரீ மகா மாரியம்மன் திருக்கோயில், சிங்கப்பூர் மாரியம்மன் கோயில் என பட்டியல் நீளும். 

இவ்வாறாக இந்தியாவிலும்,  மலாயாவிலும் ஏகப்பட்ட கணக்கில் அடங்கா சேவைகளை செய்தார்.

                              நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் உடன் சித்திர முத்து அடிகளார்
                               


ஒரு மழலையுடன் சித்திர முத்து அடிகளார்





அடியாருடன் சித்திர முத்து அடிகளார்



சித்திர முத்து அடிகளாருக்கு பாத பூசை செய்யும் காட்சி 


                                              பொது மக்களுக்காக உரை ஆற்றும் போது



                              அடியார் கூட்டத்தில் சித்திர முத்து அடிகளார்         

   


சித்திர முத்து அடிகளார்


 இளமைப் பருவத்தில்  சித்திர முத்து அடிகளார் 



                 சித்திர முத்து அடிகளாரின் அருள் படமும், அவர் பயன்படுத்திய பொருட்களும்





சித்திர முத்து அடிகளார் மற்றும் அவர் தம் குருநாதர் ஸ்ரீ ஜெகந்நாத சுவாமிகள் 



   
                         சித்திர முத்து அடிகளார்  பயன்படுத்திய பொருட்கள்
 




சுவாமிகள் ஏகப்பட்ட பாடல்களை எழுதி உள்ளார்.இவை அனைத்தும் தொகுக்கப் பெற்று "அருள் ஒளி " என்ற நூலாக வெளிவந்துள்ளது. "குருமதி மாலை"  என்ற ஆன்மிக தொகுப்பில் போலி குருமார்களை பற்றி சாடி உள்ளார். திருப்புகழ் திரவியம், பேரின்ப குரல், மரண சிந்தனை, நிறை நெறி மொழிகள், சீர் திருந்து மனிதா, கருணை கண்ணீர், கிருபை பிரகாச பொக்கிஷம், அருளொளி மலர் , காந்தியின் திருவருட் புலம்பல் என நூல் பட்டியல் நீளுகின்றது.

1958 ஆம் ஆண்டில் ஆலங்குளத்தில் ஆத்ம சாந்தி நிலையத்தை சுவாமிகள் தோற்றுவித்தார். இது பின்னாளில் தாய்வீடு என்று அழைக்கப்படுகின்றது. இங்கே சித்திரை மாதம் 7 ம் நாளில் தீப தரிசன திருவிழா ஆண்டு தோறும் கொண்டாடப் பட்டு வருகின்றது.( சுவாமிகளின் அவதாரத் திருநாளை முன்னிட்டு )







1960 ஆம் ஆண்டு அருளொளி மன்றம் மலேஷியாவில் உருவாக்கப்பட்டது. மலேஷியா அரசில் அமைச்சர் பொறுப்பில் இருந்த திரு V.T. சம்பந்தன் இதற்கு உறுதுணையாய் இருந்தது குறிப்பிடத்தக்கது.இதன் பொருட்டு மலேஷிய அரசும் அருளொளி மன்றம் நிறுவுவதற்கு இடம் தானமாக கொடுத்து உதவியது. அதிகாரபூர்வமாக 11 பிப்ரவரி 1973 அருளொளி மன்றம் செயல்படத் தொடங்கியது. பின்னர் அருளொளி மன்றம் இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, லண்டன் போன்ற நாடுகளிலும் உதயமானது.

1995 ஆம் ஆண்டு மே 5 ம் நாளில் சுவாமிகள் முக்தி அடைந்தார்.

சுவாமியின் 23 ஆம் ஆண்டு குரு பூசை தாய்வீடாகிய பனைக்குளத்தில் வரும் மார்ச் 4 ம் தேதி நடைபெற உள்ளது. வழக்கம் அழைப்பிதழ் இணைத்துள்ளோம். வாய்ப்புள்ள அன்பர்கள் கலந்து கொண்டு அருட்பெருஞ்ஜோதியின் ஆற்றலை உணரவும்.







அன்று 
பனைக்குளத்தில் சுடர்விட்ட ஆத்மஜோதி 

இன்று 
பாரெங்கும் நிறைந்த ஆனந்த பரஞ்சோதி 

கருணை 
வடிவான சித்திர முத்து ஞானஜோதி 

காண 
வாரீர் ஜெகத்தீரே பரிபூரண ஆனந்தஜோதி 

- மீண்டும் அடுத்த பதிவில் இணைவோம்.


No comments:

Post a Comment