Subscribe

BREAKING NEWS

09 March 2018

என்றும் "ரைட்மந்த்ரா" சுந்தர் வழியில்...


தள வாசகர்களுக்கு வணக்கம்.

நம் தளம் (http://tut-temple.blogspot.in/) தொடங்கி முதலாம் ஆண்டினை பூர்த்தி செய்ய இருக்கின்றோம். நமக்கு இப்படி ஒரு புரிதல் எப்படி ஏற்பட்டது?ஏன்  ஏற்பட்டது ?என்ற  ஏகப்பட்ட கேள்விகள் நம்முள் உள்ளன. இந்த அத்துணை கேள்விகளுக்கும் இந்த பதிவில் விடை தர முயற்சிக்கின்றோம்.

அனைவருக்கும் மிக மிக பரிச்சயம் ஆனவர். ஆன்மிக வழிகாட்டி, நமக்கெல்லாம் உழவாரப் பணி என்றால் என்ன என்று தொட்டுக் காட்டியவர், சைவம் வைணவம் என பேதமின்றி பக்தி ஊட்டிய உயர்ந்த பண்பாளர். பசுமையை நேசித்தவர், தொண்டிற்கு இலக்கணமானவர் என இவரைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். அவர் தான் "ரைட்மந்த்ரா" சுந்தர். என்ன தான் நாம் அவரைப் பற்றி சொன்னாலும், அவரைப்பற்றி அவர் பாணியில்...சொல்லுவதுபோல் ஆகாது ...இதோ அவரின் எண்ணங்களை அவர்பாணியில் அவரே சொல்லியிருப்பதை பார்ப்போம் ..





முழுமுதற் கடவுள் விநாயகப் பெருமானை வேண்டி வணங்கி, அவனுக்கு உகந்த ‘விநாயக சதுர்த்தி’ நன்னாளில் 19/09/2012 அன்று இந்த பயணத்தை துவக்கினேன்.E-PUBLISHING துறையில் 15 ஆண்டு அனுபவம். கிட்டத்தட்ட இரண்டரை வருடங்கள் ஒரு தனியார் நிறுவனத்தில் CHIEF LAYOUT DESIGNER ஆக பணிபுரிந்துகொண்டே ஒய்வு நேரத்தில் இந்த தளத்தை நடத்திவந்தேன். ஒரு கட்டத்தில் வேலை பார்த்துக்கொண்டே தளத்தை நடத்துவது கஷ்டமாக இருந்தது. ரைட்மந்த்ராவுக்கு எனது உழைப்பும் கவனமும் அதிகம் தேவைப்பட்டது. தனியே ஒரு அலுவலகம் அமைத்தே தீரவேண்டிய நிர்பந்தம். எனவே பணியை துறந்து, அரும்பாடுபட்டு பிப்ரவரி 1, 2015 அன்று இந்த தளத்திற்கு என்று பிரத்யேக அலுவலகத்தை மேற்கு மாம்பலத்தில் அமைத்தேன்.

ரைட்மந்த்ராவுக்காக பதிவுகள் எழுதுவது, சாதனையாளர்களை சந்திப்பது அவர்களை பேட்டி எடுப்பது என்று போக பதிப்புத் துறையில் 15 ஆண்டுகளுக்கு மேல் கொண்டுள்ள அனுபவத்தை வைத்து ஃப்ரீலான்ஸ் டிசைனிங் பணிகள் சிலவற்றை மேற்கொண்டு வருகிறேன்.சிறு வயது முதலே கதை, கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உண்டு. கடந்த பல ஆண்டுகளாக இணையத்தில் கருத்து பரிமாற்றம் செய்த அனுபவமும், பதிவு எழுதிய அனுபவம் உண்டு. கடற்கரை மணலில் எழுதப்படும் எழுத்தை போல அல்லாமல், காலத்தால் அழியாத கல்வெட்டாய்  என் எழுத்துக்கள் இருப்பதையே நான் விரும்புகிறேன்.

எம் எழுத்துக்கள் அறநெறியையும், தெய்வ பக்தியையும் பரவச் செய்யவும், வாழ்க்கையில் சாதிக்கவேண்டும் என்கிற தாகம் உள்ளவர்களுக்கு சரியான வழிகாட்டுவதற்கும் பயன்படவேண்டும் என்று விரும்பியே இந்த எளிய முயற்சியை துவக்கியிருக்கிறேன்.

கடந்த காலங்களில் எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் மற்றும் அது எனக்கு தந்த பாடங்கள் இந்த பயணதிலும்,  இனி ஈடுபடவிருக்கும்  துறையிலும் எனக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. ஏனெனில் அவன் நடத்தும் நாடகத்தில் காரணமின்றி காரியங்கள் நடப்பதில்லை. பொருளின்றி பாத்திரங்கள் பேசுவதில்லை.எதிர்கால லட்சியம் என்று பார்த்தால்… உதவி நாடி வருவோர்க்கு கிள்ளிக் கொடுக்காமல் அள்ளிக் கொடுக்கும் வண்ணம் பொருளாதாரத் தன்னிறைவு பெறுவதும் சமூகத்தில் ஒரு உயர்ந்த அந்தஸ்தை பெறுவதும் தான். பணத்தில் மட்டுமல்ல குணத்திலும் கோடீஸ்வரனாக உயர்வதே என் விருப்பம்.

ஆயிரக்கணக்கானோருக்கு வேலை தருவது என் நீண்ட நாள் கனவு. அதற்குரிய பாதையில் தற்போது உழைக்கத் துவங்கியிருக்கிறேன். மற்றபடி… அனைவருக்கும் உள்ள நியாயமான லௌகீக அபிலாஷைகள் அனைத்தும் உண்டு.இந்த தளம் துவக்க எனக்கு மிகப் பெரும் உந்துதலாக இருந்த http://shivatemples.com  திரு.நாரயணசாமி அவர்களுக்கும், http://LivingExtra.com  நண்பர் திரு.ரிஷி அவர்களுக்கும் என் நன்றி!

வாழ்க்கையில் போராடுபவர்களுக்கும், தேடல் உள்ளவர்களுக்கும், தெய்வ பக்தியும் தன்னம்பிக்கையும் உள்ளவர்களுக்கும் உற்ற துணையாக இந்த தளம் விளங்கி வருகிறது.

ஆன்மிகம், சுயமுன்னேற்றம், தன்னம்பிக்கை, ஆலய தரிசனம், மருத்துவம், ஆரோக்கியம், பக்தி இலக்கியங்கள், தமிழ் நன்னெறி நூல்கள், இதிகாசங்கள், பிரபலங்களின் பேட்டிகள், சாதனையாளர்களுடன் சந்திப்பு, பல்துறை நிபுணர்களின் பங்களிப்பு என வாழ்க்கைக்கு பயனுள்ள விஷயங்கள் மட்டுமே இந்த தளத்தில் இடம்பெறும்.எவருக்கும் அறிவுரை கூறுவது என் நோக்கமல்ல. THOUGHTS SHARING மட்டுமே எனது நோக்கம். தளத்தில் வெளியாகும் பதிவுகளில் அறிவுரை கூறும் தொனி தென்பட்டால் அது எனக்கும் சேர்த்து நான் கூறுவதாக கருத வேண்டுகிறேன்.

கடவுளை நாம் ஏற்றுகொண்டிருக்கிறோமா இல்லையா என்பது ஒரு விஷயமே அல்ல. அவர் நம்மை ஏற்றுக்கொள்ளும் நிலைமையில் நம்முடைய வாழ்க்கையும் செயல்பாடும் இருக்கிறதா என்பதையே அனைவரும் ஆராய வேண்டும் என்பது என் அபிப்பிராயம். நல்லவனாக இருந்து நாலு பேருக்கு நம்மால் இயன்ற நன்மையை செய்வதைவிட மிகப் பெரிய ஆன்மிகம் இந்த உலகில் எதுவும் இல்லை. கடவுள் என்பவர் ஏதோ கோவில் கருவறையில் மட்டும் இருப்பவர் அல்ல என்று அழுத்தம் திருத்தமாக நம்புபவன் நான்...


என்ன நண்பர்களே! அவரின் உரையைப் படித்தோம். இவர் செய்த சேவை ஒன்றா? இரண்டா? ஆயிரமாயிரம், தளத்தில் பதிவுகள், சுயமுன்னேற்றம், உழவாரப்பணி, நீதி/பக்திக் கதைகள், குரு பதிவுகள், வேதபாடசாலை உதவிகள்,கோ சம்ரட்சணம், மாமனிதர்கள் சந்திப்பு, மரம் நடுதல், கிளி வளர்ப்பில் உதவி என அடுக்கி கொண்டே  போகலாம்.இப்படிப்பட்ட மாமனிதரை நாம் எளிமையின் உருவே கொண்டு பார்க்கின்றோம். ஆங்கிலத்தில் "down to earth " என்று சொல்வார்களே ..அது இவருக்கு மிகப் பொருந்தும். ஆனால் காலத்தின் கட்டாயம், இந்த பூமியில் வந்த வேலை அவருக்கு முடிந்து விட்டது போல, இதோ இப்பொழுது இறையின் பாதத்தில் இளைப்பாறிக் கொண்டு, நம்மை வழி நடத்தி வருகின்றார்.

ரைட்மந்த்ரா சுந்தர் அவர்களுடன் கைகோர்த்து பயணத்தை நாம் தொடர்ந்து கொண்டு இருந்தோம். அவ்வப்போது அன்னதானம் செய்துவிட்டு அவரிடம் பகிர்வோம். நம்மை மிகவும் ஊக்கப்படுத்தினார். அவர் செய்கின்ற சேவைகளை கண்டு நாம் வியப்புற்று இருக்கின்றோம். அவரின் வழிகாட்டலில் ஒரு முறை உழவாரப்பணியும் செய்து இருந்தோம். இந்த பயணத்தில் ஒரு கருப்பு நாளாக 11 மார்ச் 2017 அமைந்தது, எதிர்பாராத சாலை விபத்தில் நாம் அவரை பறிகொடுத்துவிட்டோம் என்பதே உண்மை.

காலத்தின் போக்கில் அப்படியே சென்று கொண்டிருந்தோம். ரைட்மந்த்ரா உறவுகள் அனைவரும் ஒன்று கூடி பேசினோம். சுந்தரின் கனவுகள் அப்படியே கனவுகளாக இருந்துவிடக் கூடாது.அவரின் கனவுகள் மெய்ப்பட வேண்டும் என்று விரும்பி, ஏற்கனவே நாம் சிறிய அளவில் செய்து வந்த அன்னதானக் குழுவிற்கு "தேடல் உள்ள தேனீக்களாய் " என்று பெயரிட்டு மீண்டும் உழவாரப் பணியை சதானந்த சுவாமிகள்ஆசிரமத்தில் சென்ற ஆண்டு ஆரம்பித்தோம்.அப்படியே மயிலை குழந்தைவேல் சுவாமிகள், கொளத்தூர் திருமால் மருகன் ஆலயம், கொளத்தூர் துளஸீஸ்வரர் ஆலயம், குன்றத்தூர் கந்தலீஸ்வரர் ஆலயம், குன்றத்தூர் திருஊரகப் பெருமாள் ஆலயம் என தொடர்ந்து வருகின்றது. இதோ "ரைட்மந்த்ரா" சுந்தர் முதலாம் ஆண்டு நினைவு நாளான மார்ச் 11  அன்று நாம் நங்கைநல்லூர் ராஜராஜேஸ்வரி ஆஸ்ரமத்தில் உழவாரப்பணி செய்ய இருக்கின்றோம். அன்னாரின் பிறந்த நாள் அன்று கடும் மழையில் குன்றத்தூர் கந்தலீஸ்வரர் திருக்கோயிலில் உழவார செய்தோம் என்பதும் இங்கே நினைவு கூறத் தக்கது.

அதே போல் தான் அன்னதான சேவை. சிறிய அளவிலே சுமார் 10 பொட்டலங்களாக நம்மால் முடிந்த அளவில் கூடுவாஞ்சேரியில் செய்து வந்தோம். குருவருளும், திருவருளும் கூடி நம்மை அகத்தியர் வனம் மலேசியா உடன் இணைத்தது, கூடுவாஞ்சேரியில் செய்த் அன்னசேவை தற்போது வேளச்சேரி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் செய்து வருகின்றோம். இதனுடன் தற்போது உபயோகிக்காத துணிகளையும் வேண்டுவோர்க்கு சேர்ப்பித்து வருகின்றோம். "ரைட்மந்த்ரா" சுந்தர் நினைவாக நாளை  காலை திருஅண்ணாமலை தயவு சித்தாஸ்ரமத்தில் ,கூடுவாஞ்சேரி வள்ளலார் கோவிலில் மதியமும்  அன்னதானம் செய்ய இருக்கின்றோம்.எங்களுடன்இணைய  விரும்பும் அன்பர்கள் நம்மை தொடர்பு கொள்ளவும்.

குருவருளால் கூடுவாஞ்சேரியில் உள்ள அகத்தியர் பெருமானுக்கு கடந்த சில மாதங்களாக ஆயில்ய ஆராதனை செய்து வருகின்றோம்.இது தவிர மாதந்தோறும் அம்மாவாசை அன்னதானம், திருக்கோயில்களுக்கு தீப  எண்ணெய் வாங்கித் தருதல், ஆசிரமத்தில் உதவி என தொடர்ந்து வருகின்றோம். பற்பல ஆலய தரிசனங்களும் இதில் அடக்கம். மலை யாத்திரையாக ஓதிமலை, சதுரகிரி, அத்திரி மலை என்றும் தொடர்ந்து வருகின்றோம். இந்த மாத மலை யாத்திரையாக வெள்ளியங்கிரி செல்ல ஏற்பாடுகள் செய்து வருகின்றோம். சிவராத்திரி போன்ற பூசைகளின் போது "சிவ புராணம் "  போன்றவற்றை அச்சிட்டு வழங்கி வருகின்றோம்.

நாம் செய்கின்ற அனைத்து சேவைகளுக்கும் அடி நாதமாக விளங்கி வருவது "ரைட்மந்த்ரா" சுந்தர் என்று இந்த தருணத்தில் சொல்ல ஆசைப்படுகின்றோம். சென்ற ஆண்டு தமிழ்ப் புத்தாண்டு அன்று தான் இந்த தளமும் தொடங்கப் பட்டது. ஆரம்பிக்கும் போது நாம் என்ன பதிவு செய்ய போகின்றோம் என்று தத்தளித்துக் கொண்டிருந்தோம். ஆனால் இன்று திரும்பி பார்க்கும் போது நமக்கு "ரைட்மந்த்ரா" சுந்தர் வழங்கிய பணியில் சிறு துளியைத் தொட்டிருக்கின்றோம் என்பது தெரிகின்றது.

இந்த தருணத்தில் "ரைட்மந்த்ரா" சுந்தர் அவர்களோடு பயணித்த, தற்போது நம்முடனும் பயணம் செய்துவரும் குறிப்பிட்டு சொல்வதென்றால் ட்ரீ பேங்க் முல்லைவனம், கிளி சேகர், வள்ளலார் வழியில் ஹூசைன், வரமூர்த்தீஸ்வரர் ராஜா, சிவத்திரு வேதகிரி  என பட்டியல் நீளும். அனைவர்க்கும் இங்கே நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். அவர் விட்டுச் சென்ற பணிகள் ஏராளம்,அதனை தொடர்ந்து வழிநடத்தி செல்வதே நமது குறிக்கோளும் நோக்கமாகவும் உள்ளது.


குறிப்பிட்டு ஏதாவது விடுபட்டிருந்தால்  நம்மிடம் தெரிவிக்கவும்.நன்றி ..

வாருங்கள்"நம்மால் இயன்றதை செய்வோம் இயலாதோர்க்கு"
"ரைட்மந்த்ரா" சுந்தர் தம் பதிவின் மூலமும், யதார்த்த வாழ்விலும் கீழ்க்கண்ட செய்திகளையே பெரும்பாலும் பின்பற்றினார்.



‘கற்றது கையளவு. கல்லாதது உலகளவு’.

மீண்டும் என்றும் "ரைட்மந்த்ரா" சுந்தர் வழியில்...

நல்வழி நடப்போம்...! நல்லதே செய்வோம்...! சிகரத்தை எட்டுவோம்...!


மீள்பதிவாக:-

எங்களின்  ஒராண்டு பயணம் - http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_18.html

No comments:

Post a Comment