Subscribe

BREAKING NEWS

08 March 2018

பெண்மையைப் போற்றுவோம்

ன்று பெண்கள் தினம். 

பெண்கள் இன்றி இந்த உலகம்  ஏது? காணுகின்ற அனைத்திலும் பெண்மை அடக்கம்.அதாவது சிவத்துள் சக்தி அடக்கம். சக்திக்குள் சிவம் அடக்கம். நான் இன்று தங்களோடு பேசிக்கொண்டிருக்கின்றேன் என்றால் பெண்மையால் தான். அந்த பெண்மைக்கு மரியாதை தர வேண்டும். பெண்மையைப் போற்ற வேண்டும் என்பதற்காகத் தான் இந்தப் பதிவு அளிக்க  விரும்புகின்றோம். பொதுவாக மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டும் அம்மா என கேட்டிருப்போம்.சத்திய வார்த்தைகள். இவை. இந்த மனிதப்பிறவிக்கே புல்லாகி,பூடாகி,புழுவாகி,மரமாகி என்ற போது மனிதப் பிறவியிலே பெண்கள் என்றால்அதற்கும் ஒருபடி மேலே சென்று புண்ணியம் செய்திருக்க வேண்டும்.

கடவுளின் படைப்பில் தெய்வம் இருப்பது எங்கே என்று மனிதன் நிச்சயமாக கேட்பான். அப்போது அவனுக்கு சுட்டிக்காட்டவே பெண்மையை படைத்துள்ளார் என்பது உறுதி. இந்த நன்னாளில் மகளிர் அனைவருக்கும் நம் தளம் சார்பாக மகளிர் தின வாழ்த்துக்களையும் இங்கே தெரிவித்துக், கொள்கின்றோம்.

நம் தேடல் உள்ள தேனீக்களாய் குழுவானது சக்திமயமானது. எப்போதும் துறு துறு வென ஏதாவது யோசித்துக் கொண்டே இருப்பார்கள் . இந்தக் குழு ஆரம்பிக்க பிள்ளையார் சுழி போட்டவர்கள் பெரும்பாலும் பெண்களே.ஆரம்பித்ததோடு சும்மா இருக்கவில்லை. ஒவ்வொரு முறை நிகழும் உழவாரப் பணியில் மகத்தான தொண்டினை செய்து வருகின்றார்கள். நமக்கே ஆச்சர்யமாக இருக்கும். எப்படி இவர்களால் இப்படி அவர் முடிகின்றது.அனைவரும் சனிக்கிழமை அகன்று கூட வேலைக்குச் செல்பவர்கள். ஒரே ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமை விடுப்பில் வீட்டில் ஹாயாக இல்லாமல் சிவத்தொண்டு புரிய வருகின்றார்கள் என்றால் இவர்களைப் பற்றி என்ன சொல்வது.அனைவரின் பாதம் தொட்டு வணங்குகின்றோம்.

உழவாரப் பணி என்ற சேவை மட்டுமில்லை. அன்னதானம் என்று சொன்னவுடன் தன்னிடம் இருக்கும் பொருளை உடனே தருவதில் இவர்களை வள்ளலாக பார்க்கின்றோம்.சிலர் ஒரு படி மேலே போய், அன்னதானத்தோடு வஸ்திரமும் வழங்கலாம் என்று சொன்னதோடு நில்லாமல்,அதை செயலில் நிகழ்த்திக் காட்டியுள்ளார்கள். ஆலய தரிசனமா ? சொல்லவே வேண்டாம். அன்போடும் கருணையோடும் நடந்து கொள்வார்கள். அகத்தியர் ஆயில்ய பூசையிலும் இவர்களின் பங்கு மகத்தானது. வெற்றுக் காகிதமாக சுற்றிக் கொண்டிருந்த நம்மை அழைத்து, நம்மிடம் மிகப் பெரும் பொறுப்பை நம்மைச் சுற்றியுள்ள பெண்மையே வழங்கியுள்ளது. என்ன கைம்மாறு அவர்களுக்கு செய்ய போகின்றோம் என்று தெரியவில்லை. தினசரி பிரார்த்தனையில் இவர்களுக்கு நிச்சயம் இடம் உண்டு. இனியொரு பிறவியில் பெண்ணாய் படைத்திடு எம்மை...என்று அந்த சக்தியிடம் வேண்டுகின்றோம்

இந்த பதிவிற்கு பொருத்தமான இணைப்புப் படம் தேடிய போது,




நம் தேடல். உள்ள தேனீக்களாய் குழுவின் ஆண்டு விழாவின் நிறைவில் எடுக்கப்பட்ட படம். மீண்டும் இது போல் அனைவரும் ஒன்றாய் இணைய இறையருள் கூட்டுவிக்கும்.பெண்களை சிறந்த முறையில் நடத்த வேண்டும் என்பதை சாத்திரங்கள் பல இடங்களில் வலியுறுத்தியிருக்கின்றன. எத்தனையோ சிறப்புக்கள் பெற்றிருந்தும் பெண்ணாசையால் வீழ்ந்தான் இலங்கைவேந்தன் இராவணன். பெண்ணின் கோபத்துக்கு ஆளானால் எப்பேற்ப்பட்ட சாம்ராஜ்ஜியமும் மண்ணோடு மண்ணாகி அழிந்துவிடும் என்பதை உணர்த்துகிறது மகாபாரதம். மனைவி மகிழ்ச்சியாக இருக்கும் வீட்டில் நல்லதே நடக்கும் என்பது ஆன்றோர் வாக்கு. எந்த வீட்டில் பெண் கண்ணீர் சிந்துகிறாளோ அந்த வீட்டில் திருமகள் வெளியேறி மூதேவி குடியேறுவாள்.
இன்று பெண் விடுதைலையை பற்றி பலர் பேசினாலும் அதை முதன் முதலில் செயலில் காட்டியது சிவபெருமான் தான். தனது ஒரு பாதியை உமையவளுக்கு அளித்து, ஆணுக்கு சரி நிகர் பெண்கள் என்று உலகிற்கு உணர்த்தியவன் அவன். 
சரித்திரத்திலும், நம் பக்தி இலக்கியங்களிலும், வரலாற்றிலும் பெண்மைக்கு உதாரணமாய் திகழ்ந்து பெண்மைக்கு மாபெரும் மதிப்பும் மரியாதையையும் தேடித்தந்த பல பெண்கள் இருக்கிறார்கள். பெண்களை பற்றிய பொத்தாம் பொதுவான அபிப்ராயங்களை தவிடு பொடியாக்கியவர்கள் இவர்கள். இவர்களை எத்தனை பேருக்கு தெரியும் என்று தெரியாது. தெரியவைப்பது நம் கடமை.
பெண்ணினத்திற்கு பெருமை சேர்த்த மாதரசிகள் சிலரை பார்ப்போம்.

அனுசூயா : அத்திரி மகரிஷியின் பத்தினி இவர். கணவரை கண்கண்ட தெய்வமாக ஒழுகிய கற்புக்கரசி. இவளது கற்பின் வலிமையையும் பெருமையையும் உலகிற்கு உணர்த்த விரும்பிய மும்மூர்த்திகள், மூன்று ரிஷிகளாக வேடம் புனைந்து, அத்திரி மகரிஷியின் ஆஸ்ரமத்துக்கு அவர் இல்லாதபோது சென்று பசிக்கு அன்னமிடுமாறு கேட்டனர். அதை அளிக்க அனுசூயா முன்வந்தபோது, “நாங்கள் காமக் குரோத லோபம் என்னும் மும்மலங்களை அறுத்தவர்கள். எங்களுக்கு நீ எந்த ஆடையும் இன்றி நிர்வாணமாகத் தான் உணவு பரிமாற வேண்டும். இல்லையென்றால் அது எங்களை அவமதிக்கும் செயல்” என்று கூற, செய்வதறியாது தவித்த அனுசூயா, தமது கணவரை வேண்டிக்கொண்டு, இவர்கள் மீது அத்திரிஷி மகரிஷியின் பாதத்தை கழுவிய நீரை இவர்கள் மீது தெளிக்க, அந்த கணமே மும்மூர்த்திகளும் மூன்று பச்சிளங் குழந்தைகளாக மாறிவிடுகின்றனர். கணவன்மார்களை காணாது தவித்த முப்பெரும் தேவியரும் விஷயத்தை கேள்விப்பட்டு அத்திரி மகரிஷியின் ஆஸ்ரமத்துக்கு ஓடிவந்து அனுசூயாவின் கால்களில் வீழ்ந்து வணங்க…. மீண்டும் மும்மூர்த்திகள் சுய உருவம் பெறுகிறார்கள். முப்பெரும் தேவியர்களுக்குமே மாங்கல்ய பாக்கியம் தந்த பெருமை அனசூயைக்கு உண்டு.
நளாயினி : சூரியனையே நிறுத்தியவள் இவள். தொழு நோய் பீடித்த தன் கணவன் விரும்புகிறான் என்பதற்காக அவனை தாசியின் வீட்டுக்குக் கூடையில் வைத்து சென்றவள், இருட்டின் காரணமாக, அவளது கூடை கழுவில் ஏற்றபட்டிருக்கும் மாண்டவ்ய மகரிஷி மீது மோதிவிட ஏற்கனவே அவதிப்பட்டுக் கொண்டிருந்த முனிவர் தனக்குத் துன்பம் கொடுத்த அவன் சூரியோதயத்தில் தலைவெடித்து இறக்குமாறு சாபம் கொடுக்கிறார். இதைக்கேட்ட அந்த பத்தினி தான் பதிவிரதை என்பது உண்மையானால் சூரியன் உதிக்கக்கூடாது என்று பதில் சாபம் விடுகிறாள். உலகம் இருட்டில் மூழ்கிட அதன் காரணத்தை அறிந்த பிரம்மன் அத்திரி முனிவர் ஆசிரமம் அடைந்து அனுசூயையிடம் நளாயினியைச் எப்படியாவது சந்தித்து சூரியோதயத்திற்கு வழிவகுக்குமாறு வேண்டுகிறார். அனுசூயை அவ்வாறே நளாயினியை சந்தித்து அவள் சாபத்தை விலக்கிக் கொண்டு சூரியோதயம் ஏற்பட்டு உலகம் உய்ய செய்யும்படி கேட்டுக்கொள்கிறாள்.
மீண்டும் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள். இதுபோல் மேலும் பல மாதரசிகள் பற்றி அவ்வப்போது பேசுவோம்.



No comments:

Post a Comment