Subscribe

BREAKING NEWS

16 July 2018

அகத்தியர் வனம் மலேஷியா (AVM) உதவியுடன், ராம்ஜி பொதுநல அறக்கட்டளையில் சில மணித் துளிகள்

அனைவருக்கும் வணக்கம்.

உள்ளூர் குளம் தீர்த்தம் ஆகாது என்பார்கள். அது போல் தான் நாம் தேனியில் இருக்கும் வரை அந்த ஊரைப் பற்றி அதிகம் தெரியாது இருந்தோம், ஆனால் இப்போது தேனிக்கு செல்லும் போதெல்லாம் நமக்காக சில அரிய கோயில்கள், தலங்கள் என புதிது புதிதாக கண்டு, கேட்டு வருகின்றோம்.இவை நமக்கு புதுத் தெம்பை அளிக்கின்றன. உதாரணமாக தேனி வீரபாண்டி கோயில் தாண்டி, எத்துனை பிரசித்தி பெற்ற கோயில்கள். அது போல் தான் சென்ற வாரம் தேனிக்கு செல்வது என முடிவானதும், சமூக இணைய தளம் (facebook) மூலம் ராம்ஜி பொதுநல அறக்கட்டளை பற்றி கேள்விப்பட்டு அவர்களுடன் தொடர்பு கொண்டோம்.

சரியாக வெள்ளிக்கிழமை இரவு, ராம்ஜி பொதுநல அறக்கட்டளை நிறுவனர் திரு.வெங்கட பூபதி அவர்களிடம் பேசி விட்டு, சனிக்கிழமை மதிய உணவு சமயத்தில் நேரில் வந்து தங்களை சந்திப்பதாக வாக்குறுதி அளித்துவிட்டு, முகவரியைப் பார்த்தால், பாரஸ்ட் ரோடு அருகில் தான் ராம்ஜி பொதுநல அறக்கட்டளை இருப்பது தெரிந்தது. அடுத்த நாள் காலை அன்னஞ்சி ஊஞ்சாலம்மன் தரிசனம் முடித்து, வீட்டிற்கு வந்து ஓய்வு எடுத்தோம். பின்னர் தான் ராம்ஜி பொதுநல அறக்கட்டளை செல்ல வேண்டும் என்று உதித்தது. அன்றைய நாள் முழுதும் உணவிற்காக ஆகும் செலவு ரூ.1300 /- என்று கூறினார்கள்.


வீட்டின் அருகில் இருந்தாலும் எப்படி இத்தனை  நாட்களாக இப்படியொரு அமைப்பு அருகில் இருப்பது தெரியவில்லை என்று நமக்குத் தோன்றியது. அங்கு சுமார் 8 பேர் இருந்தார்கள். நிறுவனர், திரு.வெங்கட பூபதி அவர்களை சந்தித்தோம். அவரும் சக்கர நாற்காலியோடு தான் இருந்தார். ஆனால் அவருடனான பேச்சில் நாம் இப்படி இருக்கின்றோம் என்ற எண்ணம் இல்லை. மாறாக மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி இருந்தது. நாம் மதிய நேரம் சென்றதால், உணவு பரிமாறத் தொடங்கினார்கள்.





இங்கு வந்துள்ள ஒவ்வொருவரும் ஒவ்வொரு பின்னணியில் வந்து உள்ளார்கள். பனை, தென்னை போன்ற மரங்களில் ஏறி விழுந்தது, பண்டிகை கால சூழியல் போன்றவற்றில் முதுகெலும்பு பாதிக்கட்டவர்கள் இங்கே வந்து உள்ளார்கள். அவர்களுக்கு உதவியாக அவர்களின் வீட்டில் இருந்து கூட மாட, ஒத்தாசை பண்ண ஒருவரும் வந்து இருக்கின்றார்கள். வருபவர்களுக்கு முதலில் உடலில் பிசியோதெரபி,உணவுக்கட்டுப்பாடு மூலம் இருக்கும் சூழலோடு எப்படி இருப்பது என்று சொல்லிக் கொடுக்கின்றார்கள்.அடுத்து அவர்களுக்கு சிறு சிறு தொழிற்பயிற்சிகளை அளித்து அன்றாட  செலவிற்கு சுய சம்பாத்தியம் அளிக்கிறார்கள். இதெல்லாம் வெறும் 3 மாதத்தில் இருந்து 6 மாதத்திற்குள் தான்.இவை அனைத்தும் நம்மை ஆச்சர்யப்பட வைத்தன. நாமெல்லாம் தினமும் வெட்டியாக பொழுதை கழித்து வருகின்றோம். மூன்று மாதத்தில் ஒருவருக்கு உடல் சார்ந்து மாற்றம் கொண்டு வருகின்றார்கள் என்றால் அவர்களுக்கு நாம் ராயல் சல்யூட் அடிக்க வேண்டும் என்றே தோன்றியது.




இந்த மறுவாழ்வு பயிற்சி மையம் 2017 ஆண்டு  முதல் செயல்பட்டு வருகின்றது. ஆனால் ராம்ஜி பொதுநல அறக்கட்டளை 2012 ஆண்டு முதல் செயல்பட்டு வருகின்றது. முதலில் தையல் போன்ற தொழிற்பயிற்சி மையங்களை நிறுவி சேவை செய்து வந்தர்வர்கள், பின்னர் மறுவாழ்வு பயிற்சி மையம் மூலம் பற்பல தொண்டு செய்து வருகின்றார்கள். இங்கு பயிற்சி பெற்ற சில மாணவர்கள் சத்யபாமா கல்லூரியில் படித்து வருவதாக சொன்னார்கள். சமுதாயத்தில் எடுத்துக்காட்டாக பலரை உருவாக்கி வரும் ராம்ஜி பொதுநல அறக்கட்டளை போற்றத்தக்க ஒன்று ஆகும்.இது வெறும் வாய் வார்த்தை அன்று; மனதில் இருந்து கூறுகின்றோம்.






                                                     பி.எட் படித்த பட்டதாரி இவர்.



உணவைப் பொறுத்தவரை காலையில் நவதானியக் கஞ்சி கொடுக்கின்றார்கள். மதியம் கலவை சாதம் போன்று தருகின்றார்கள். அவர்களோடு இணைந்து உணவு உண்டோம். அருஞ்சுவையாய் இருந்தது. இரவு உணவாக இட்லி தருகின்றார்கள். இட்லி மாவாட்டி குளிர்சாதனப் பெட்டியில் வைப்பது இல்லை, மாறாக அன்றைய தினம் காலை தான் இட்லி மாவு ஆட்டி, அதனை அப்படியே அன்றிரவு பயன்படுத்துகின்றார்கள்.  அவர்களின் ஒரு வாரத்திற்கான நேர அட்டவணை இதோ.உண்மை தான் இப்படி அட்டவணை போட்டு இருப்பதால் தான் இவர்களை சிகரம் சீக்கிரம் தொட முடிகின்றது. அப்படி என்ன என்கின்றீர்களா? இணைப்புப் படம் பாருங்கள்.








நேரம் ஆகிக் கொண்டிருந்தது. ஒரு சிறிய உரையாடல் கேட்டுவிட்டு, நம்பிக்கையைப் பெற்று விட்டு வந்தோம்.




அன்றைய தினம் உணவுக்காக நாம்  அகத்தியர் வனம் மலேஷியா (AVM) மூலம் ரூ.2000 கொடுத்து விட்டு, அவர்களுக்கு நன்றி சொல்லி, அங்கிருந்து புறப்பட்டோம். மீண்டும் ஒரு வாய்ப்பு வரும் போது,மீண்டும் நேரில் சந்திப்போம்.





மேலும் விபரங்களுக்கு:

P.Venkataboopathi Founder/Director Ramji Trust 239/21w 6th extension KRR Nagar Theni Pin 625531 whatsp :7871367699 cel : 8610912806 email : ramjitrust.gmail.com web : ramjitrust.in

https://www.facebook.com/ramjitrustramji/

மீள்பதிவாக:-

கொடுத்துப் பார் - AVM அன்னதான அறிவிப்பு - http://tut-temple.blogspot.com/2017/11/avm.html

அறம் செய்ய விரும்பு - https://tut-temple.blogspot.in/2017/10/blog-post_31.html

பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தோம் ...ஐயனே! எம் ஐயனே!! - https://tut-temple.blogspot.in/2017/09/blog-post_41.html

பெரியபுராணம் கூறும் பூரண தானம் & அன்ன தான அறிவிப்பு - https://tut-temple.blogspot.in/2017/09/blog-post_12.html

AVM & TUT இணைந்த அன்னதான நிகழ்வின் துளிகள் - யார்க்கும் இடுமின், அவர் இவர் என்னன்மின் - http://tut-temple.blogspot.in/2017/08/avm-tut.html

ஆடி அமாவாசை - பூரண தான நிகழ்வு - 22/07/2017 - http://tut-temple.blogspot.in/2017/07/22072017.html

உங்கள் உணவிலிருந்து ஒரு கவளம் கொடுங்கள் போதும் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_80.html

எங்களின் ஓராண்டு பயணம்..- http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_18.html



No comments:

Post a Comment