Subscribe

BREAKING NEWS

14 July 2018

அவசியம் 13 ஆம் ஆண்டு விழா & 114 ஆவது யாத்ரா அழைப்பிதழ்


அவசியம்

ஆரோக்கிய ஆன்மிக சேவை அமைப்பு பற்றி நாம் சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் திருஅண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள அறிவிப்பு பலகையில் கண்டோம். பின்னர் அப்படியே விட்டுவிட்டோம். அவ்வப்போது வாட்ஸாப்ப் பகிர்வில் அவசியம் யாத்திரை பற்றி வரும். எப்படி இத்தனை யாத்திரை நடத்துகின்றார்கள்? அதுவும் யாருக்கும் அதிகம் தெரியாத சித்தர் கோயில், மலை என்று நாம் வியந்திருக்கின்றோம். அருப்புக்கோட்டை சித்தர்கள் யாத்திரையில் கலந்து கொண்டோம். சுமார் 15 சித்தர்களை தரிசித்து அருள் பெற்றோம். அப்படியே மலையேற்றம் பற்றி அறிந்து கொண்டு நாமும் பயணிக்க தொடங்கினோம். நமக்கும் மலையேற்றம் பிடித்துப்போனது. இந்த பயணத்தில் வெள்ளியங்கிரி, ம்ருகண்ட மகரிஷி மலை, குருமலை, சதாசிவன் கோணா & கைலாச கோணா மலை என்று சென்று வந்தோம். அனைத்தும் புதுப்புது அர்த்தங்களை நமக்கு கொடுத்து வருவது உண்மையே. இதில் நாம் சில யாத்திரைகளை கால, நேர சூழலில் தவறவிட்டுள்ளோம். அவசியம் அமைப்பின் 11 ஆம் ஆண்டு விழா திருஅண்ணாலைமையில் நடைபெற்றது. அதில் குடும்பத்தோடு கலந்து கொண்டோம்.

இந்த ஆன்மிக யாத்திரையில், யாத்திரை மட்டுமின்றி, சித்தர்கள் பற்றியும், வழிபாடு பற்றியும் புது புது அன்பவங்களை பெற்றோம்.அவசியத்துடன் முதல் மலையேற்றம் வெள்ளியங்கிரி மலை யாத்திரை. இன்னும் நீங்காத நினைவலைகளாக இருந்து வருகின்றது. கேட்டவுடன் மனம் துள்ளியது. மலை எப்படி இருக்கும்? ஏழு மலை என்கிறார்களே? எப்படி ஏறப்போகின்றோம் என்று 1008 கேள்விகள். ஆனால் அவர்களின் அரவணைப்பில் முத்தாய்ப்பான மலையேற்றமாக அது அமைந்தது. அந்த அனுபவம் நாம் பிறந்து வளர்ந்த கேரளாவின் பின்னணியை தொட்டுக் காட்டியது. வெள்ளியங்கிரி அனுபவத்தை 5 பதிவுகளாக வெளியிட்டுளோம். மீள்பதிவில் மீண்டும் ஒருமுறை படித்துப் பார்க்கவும்.

அடுத்து ஸ்ரீ மிருகண்ட மகரிஷி மலை. ஸ்ரீ மிருகண்ட மகரிஷி மலை  என்ற தகவல் கிடைத்தது. வழக்கம் போல் இணையவெளியில் தேடிப் பார்த்தோம். ஸ்ரீ மிருகண்ட மகரிஷி பற்றி சில தகவல்கள் கிடைத்தது.ஆனால் அந்த மலையைப் பற்றி தகவல் ஏதும் கிடைக்கவில்லை.

கருணை நிறைந்த விழியாள் அம்மா ! அருட் கருணை வடிவாள் ஸ்ரீ மூங்கிலணை காமாட்சியின் அருளால் வளம் கொழிக்கும் பூமியில் ...மங்கள மஞ்சளாறு பாயும் வனத்திற்குள் ...ஸ்ரீ கௌதம மகரிஷியின் புதல்வரும்,ஸ்ரீ மார்க்கண்டேய மகரிஷியின் தந்தையுமான ஸ்ரீ மிருகண்ட மகரிஷிகள் அருட்தவம் புரிந்த தவ பீடத்தை தரிசித்து ஆயுள்,ஆரோக்கியம் ஆனந்தம் பெற  5 கி.மீ உயரம் கொண்ட ஆற்றல் அருளும் மலைக்குள் யாத்திரை செல்ல இருக்கின்றோம்.இத்தனைக்கும் இந்த மலை தேனி மாவட்டத்தில் தான் உள்ளது என்பது நமக்குத் தெரியவில்லை.இந்த அனுபவமும் மறக்க முடியாத அனுபவம். மலை மேல் ஒரு சாரல் மழை, ஐயனின் அருள் தரிசனம், ஹ்ம்ம்..இவையெல்லாம் நேரில் அனுபவிக்க வேண்டியவை.

அடுத்து கோவில்பட்டி அருகில் உள்ள குருமலை. இநத அனுபவமும் சொல்லில் அடங்கா சுகானுபவம்.

மிக மிக பிரமிப்பை தந்தது சதாசிவன் கோணா &  கைலாச கோணா மலை யாத்திரை. அகம் நோக்கி திரும்ப நம்மை ஆணையிட்ட யாத்திரை இது. இதனை நம் தலத்தில் தனிப்பதிவாக வெளியிட்டுள்ளோம். இவை தவிர தீர்த்தமலை, தேனி சண்முகநாதன் மலை, பர்வதமலை,சதுரகிரி,அத்திரி மலை, தேனி கண்ணகியம்மன் கோயில், அச்சரப்பாக்கம் வஜ்ரகிரி மலை, தேனி சுருளி மலை, சபரி மலை, ஓதிமலை, குன்றத்தூர் முருகன், திருக்கழுக்குன்றம் சிவன், அழகர் மலை,திருப்பதி, திருப்பரங்குன்றம் மலை என்று மலை யாத்திரை செய்து வந்துள்ளோம். இவை அனைத்திற்கும் பிள்ளையார் சுழி போட்டது மதுரை அவசியம் டிரஸ்ட் தான். இதே போல் சித்தர்கள் பற்றியும் நம்மை ஆழப் பதிக்க செய்தது அவர்கள் தான்.

இது போன்ற மலையேற்றம் நம் பித்தம் தெளிய வைக்கின்றது. நம் வாழ்வை வசந்தம் ஆக்குகிறது. இவை தவிர இன்னும் எண்ணற்ற மலைகள் பாக்கி இருக்கின்றது. கொல்லிமலை,வீரமலை,மருத்துவாழ்மலை,மாசிப்பெரியண்ணாமலை ,அன்னமலை, கூவை மலை,பொதிகைமலை,பச்சைமலை ,பர்வதகிரி,பிரான்மலை,கஞ்சன்மலை,தேனீ மலை,சஞ்சீவி மலை,காட்டழகர் மலை வடசென்னிமலை என பட்டியல் நீளும்.இவை எல்லாம் நாம் கண்டு,கேட்டு நடந்து,கிடந்து இருக்கும் நாள் எந்நாளோ? என்று மனம் ஏங்குகின்றது.

இவர்களின் சேவை மலையேற்றம், சித்தர்கள் யாத்திரையோடு நிற்கவில்லை. மேலும் பல பல தொண்டுகள் செய்து வருகின்றார்கள். அவசியம் அருணைக் குடில் மூலம் நித்தம் நித்தம் அன்னம்பாலிப்பு செய்து வருகின்றார்கள். இது தற்போது காசி பைரவ் அன்னதர்மசாலா என்று தொடங்க உள்ளார்கள். மேலும் அவசியம் ஸ்ரீ பாபாஜி முத்திரை பயிற்சி மையம், இயற்கை பரிபூரண நலவாழ்வு மையம், உழவாரம், ஆலய பூஜைக்குழு என இவர்களின் சேவை விரிந்து வருகின்றது. மேலும் அவ்வப்போது தீபாவளி,பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் சாதுக்களுக்கு வேட்டி,துணி, உணவு, ஆதரவற்ற, மனவளர்ச்சி குன்றிய நிறுவனங்களில் உள்ள குழந்தைகள்,பெரியவர்கள் என உதவி, நன்கு படிக்கும், வசதி அற்ற அவசியம் குழுவில் உள்ளவர்களுக்கு கல்வி உதவி என நீக்குகின்றது. நம்மால் இங்கு இவற்றை தட்டச்சு செய்யவே கை வலிக்கின்றது எனும் போது  இவர்கள் ஆற்றும் தொண்டின் சிறப்பை நாம் எப்படி சொல்வது? தமிழ் மொழியில் வார்தைகளை தேடிக் கொண்டிருக்கின்றோம். ஒரே வார்த்தையில் சொல்வதானால் "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"  என்று கூறலாம்.

அவசியம் ஆரோக்கிய ஆன்மிக சேவை அமைப்பு 13 ஆம் ஆண்டு விழா  கொண்டாட இருக்கின்றது. மேலும்  114 ஆவது யாத்ராவும் ஏற்பாடு செய்துள்ளார்கள். இந்த யாத்திரையில் ஏகப்பட்ட சித்தர் தரிசனங்களை பெறலாம். அழைப்பிதழை இணைத்துள்ளோம். வாய்ப்புள்ள அன்பர்கள் கலந்து கொண்டு இறையருள் பெறுக!




அவசியம் ஆன்மிக அமைப்பில் நாம் சென்னை பொறுப்பாளராக நியமிக்கப்பட்டோம். சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன், வெளியில் இருந்தும் வேடிக்கை பார்த்த நமக்கு, இது புது பொறுப்பாக இருந்தது. இந்த ஆண்டு, நாம் கனவிலும் நினைக்காத வண்ணம், நமக்கு அறுபத்து மூவர் விருது தர இருக்கின்றார்கள். அழைப்பிதழ் கண்டு மனம் மகிழ்ந்தோம். அனைத்தும் குருவருளால் அன்றி, நம்மால் ஒன்றும் இல்லை என்பது தெள்ளத் தெளிவாக தெரிகின்றது. இந்த விருது பெறுவதற்கு நமக்கு தகுதி உண்டா என்று தெரியவில்லை. ஆனால் தகுதியைப் பெற இன்னும் உழைக்க விரும்புகின்றோம். இதற்கு அந்த எம் பெருமாள் அருள் புரிய வேண்டுகின்றோம்.




இந்தப் பதிவின் மூலம் நம்மை வழிநடத்தும் அவசியம் ஆரோக்கிய ஆன்மிக சேவை அமைப்பிறகு நம் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

மீள்பதிவாக:-

அழகெல்லாம் முருகனே ... அருளெல்லாம் முருகனே...- http://tut-temple.blogspot.com/2018/06/blog-post_47.html

தேனி சண்முகநாத மலை தரிசனம் (1) - http://tut-temple.blogspot.com/2018/06/1.html

வெற்றி வேல் வீர வேல் - தேனி சண்முகநாத மலை தரிசனம் - http://tut-temple.blogspot.com/2018/05/blog-post.html

தீர்த்தகிரி அடிவாரக் கோயில் தரிசனம் - http://tut-temple.blogspot.com/2018/03/blog-post_17.html

வாழ்வில் திருப்பங்கள் தரும் தீர்த்தகிரி யாத்திரை - http://tut-temple.blogspot.com/2018/03/blog-post_12.html

ஸ்ரீ ராமரின் வழியில் தீர்த்தகிரி யாத்திரை - http://tut-temple.blogspot.in/2018/03/blog-post_8.html

யாத்திரையாம் யாத்திரை ...தீர்த்தகிரி யாத்திரை - http://tut-temple.blogspot.in/2018/03/blog-post_7.html

மலை யாத்திரை : சதாசிவன் கோணா & கைலாச கோணா - http://tut-temple.blogspot.in/2018/02/blog-post_37.html

மலை யாத்திரை : சதாசிவன் கோணா & கைலாச கோணா - 1 - http://tut-temple.blogspot.in/2018/02/1_7.html

மலை யாத்திரை : சதாசிவன் கோணா & கைலாச கோணா - 2 - http://tut-temple.blogspot.com/2018/02/2.html

இம்மாத மலை தரிசனம் - ஸ்ரீ மிருகண்ட மகரிஷி மலை - http://tut-temple.blogspot.com/2017/08/blog-post_15.html

குழந்தை வரம் அருளும் ஸ்ரீ மிருகண்ட மகரிஷி மலை - தொடர்ச்சி - http://tut-temple.blogspot.com/2017/08/blog-post_19.html

இப்பிறப்பில் உன்னைக் காண்கின்றோம் - வெள்ளியங்கிரி ஈசா ! - http://tut-temple.blogspot.com/2017/07/blog-post_51.html

வெள்ளியங்கிரி ஈசன் தரிசனம் கிடைக்குமா? - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_3.html

வெள்ளியங்கிரி ஈசனே! நீயே துணை - தொடர்ச்சி - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_28.html

இன்பத்தை அள்ளித்தரும் வெள்ளியங்கிரி - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_15.html

பாவம் தீர்க்கும் வெள்ளியங்கிரி - தொடர்ச்சி - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_19.html

மனதை வெளுக்கும் வெள்ளியங்கிரி - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_13.html

No comments:

Post a Comment