Subscribe

BREAKING NEWS

06 July 2018

திருவிடந்தை நித்யகல்யாணப் பெருமாள் மகா கும்பாபிஷேகம்


 பெருமாள், திருக்கல்யாண கோலத்தில், பூதேவியான அகிலவல்லித் தாயாரைத் தமது இடபாகத்தில் ஏந்தி, வராக மூர்த்தியாக சேவை சாதிக்கும் அற்புத நிலையில் திருவிடந்தையில் அருள்மிகு நித்திய கல்யாண பெருமாள் காட்சி தருகிறார்.

கோயிலின் மூலவராக ஆதிவராகப் பெருமாளும், மூலவர் தாயாராக அகிலவல்லி நாச்சியாரும், உற்சவராக நித்ய கல்யாண பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சி தருகின்றனர். கல்யாண விமானமும், தலவிருட்சமாக புன்னை மரத்தையும் இக்கோயில் கொண்டுள்ளது.


 பெருமாள், திருக்கல்யாண கோலத்தில், பூதேவியான அகிலவல்லித் தாயாரைத் தமது இடபாகத்தில் ஏந்தி, வராக மூர்த்தியாக சேவை சாதிக்கும் அற்புத நிலையில் திருவிடந்தையில் அருள்மிகு நித்திய கல்யாண பெருமாள் காட்சி தருகிறார்.

இந்தக்கோயிலில் 05/07/2018 அன்று காலை மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த செய்தியை நம் குழுவில் பகிர்ந்தோம். உடனே நமது நண்பர் திரு. குமார் ஐயா அவர்கள் நேரிடையாக சென்று நமக்காக, நம் குழுவிற்காக சில அருள் காட்சிகளை அள்ளித் தெளித்தார். அதனை இங்கே பகிர்கின்றோம்.

வைணவ திவ்யதேச வரிசையில் தொண்டை நாட்டுத் திருப்பதிகளில் ஒன்றாகத் திகழ்கின்றது. திரு(லட்சுமி)யை தம் இடப்பாகத்தில் பெருமாள் கொண்டுள்ளதால் இத்திருத்தலத்திற்கு திருவிடவெந்தை எனப்பெயர் ஏற்பட்டு பின் மருவி திருவிடந்தை ஆயிற்று. மூலவர் ஆதிவராகப் பெருமாள் பூமிதேவி அம்சமான அகிலவல்லி தாயாரை தம் இடப் புஜத்தில் ஏந்திக் கொண்டு, ஒரு காலை பூமியிலும், மற்றொரு காலை ஆதிசேஷன் தம்பதியினரின் சிரசிலும் வைத்துக் கொண்டு கிழக்கே திருமுக மண்டலக்கொண்டு ஆறரை அடி உயர திருக்கோலத்தில் அற்புத சேவை. 






ஜூலை 5-ம் தேதி காலை விஸ்வரூபம், ஹோமங்கள், யாத்ரா தானம், தச தானம், உற்சவர் புறப்பாடுடன் காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள்ளாக மஹா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, பிரம்ம கோஷம், அனுக்ரஹம் வேதப் பிரபந்தம் சாற்றுமுறை, தீர்த்த விநியோகம், அடுத்து சுவாமி திவ்ய தரிசனம், இரவு சுவாமி புறப்பாடு ஆகியவை நடைபெற்றன.









108 திவ்விய தேசங்களில் ஒன்றான இத்தலம், சென்னையில் இருந்து 42 கி.மீ. தூரத்தில் உள்ளது.

வராக தீர்த்தத்தில் மாசி மாதத்தில் நீராடி பெருமாளை சேவித்தால் மோட்சம் கிடைக்கும் என்பதும், கல்யாண தீர்த்தத்தில் சித்திரை மாதத்தில் நீராடி பெருமாளை சேவித்தால் பாவங்கள் அழியும் என்பதும் ஆதிவராகப் பெருமாள் பலி என்ற அசுர மன்னனுக்கு வழங்கிய அருள்வாக்காகும்.

தம்பதி சமேதராய் ஆதிசேஷன், பெருமாள் திருவடியை தாங்க சேவை சாதிப்பதால் இப்பெருமாளை சேவிப்பவர்க்கு ராகு, கேது தோஷங்கள் நீங்குகின்றன.
திருமணமாகாத ஆண்களும், பெண்களும் இத்தலத்திற்கு வந்து மாலை அணிந்து வேண்டிக்கொண்டு, ஒன்பது முறை பிரதட்சணம் வந்து வீடு சென்றால் விரைவில் திருமணம் கூடி வருகிறது.

திருமங்கை ஆழ்வார் பெருமாளை 10 பாசுரங்களில் பாடி சிறப்பித்துள்ளார்.

நித்யபடி நான்கு கால பூஜைகள் வைகானச ஆகமப்படி சிறப்புடன் நடைபெறுகிறது.

ஆனிகருடசேவை, ஆடிப்பூரம், கஜேந்திரமோட்சம் கருடசேவை, ஸ்ரீஜெயந்தி, உறியடி உற்சவம், நவராத்திரி, விஜயதசமி, தீபாவளி, கார்த்திகை தீபம், தனுர்மாத பூசை, மாசிமகம் கருடசேவை, பங்குனி உத்திரம், சித்திரை பிரம்மோற்சவம், வைகாசி வசந்த உற்சவம் ஆகியவை திருக்கோயில் மூலமும் உபயதாரகள் மூலமும் சிறப்புடன் நடத்தப்பட்டு வருகின்றன.
காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையும், பிற்பகல் 3 மணி முதல் 8 மணி வரையும் சந்நிதிகள் தரிசனத்திற்காக திறந்திருக்கும்.

- மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.

No comments:

Post a Comment