Wednesday, July 18, 2018

தமிழ்நாட்டு திருவிழாக்கள் தொகுப்பு

அனைவருக்கும் வணக்கம்.

தமிழ்நாட்டு கோயில்கள் தான் எத்தனை சிறப்புமிக்கது! ஒவ்வொரு கோயிலும் வியப்பாகவும் உள்ளது? எப்படி இவ்வளவு வேலைப்பாடுகளுடன் தத்ரூபமாக கோயில்கள் அமைத்து உள்ளார்கள்.அதனால் தான் கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டா என்றும் நம் தாத்தன், பாட்டன்,முப்பாட்டன் சொல்லி உள்ளார்கள்.தமிழகம் முழுதும் புண்ணிய பூமியே. எட்டுத்திக்கும் எண்ணற்ற கோயில்கள். இப்பிறவி வாய்க்குமோ? அனைத்து கோயில்களையும் தரிசனம் செய்ய என்று நாம் ஏங்கிக் கொண்டுதான் இருக்கின்றோம். இவை அனைத்தும் நம்மோடு இருந்துவிடக் கூடாது. வரும் தலைமுறை கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். கோயில்கள் தான் சிறப்பு என்றால் கோயில்களில் கொண்டாடப்பட்டு வருகின்ற விழாக்கள்..சிறப்பிலும் சிறப்பாக..இவற்றை சற்று தொகுக்க விரும்பினோம்.அதற்காகத் தான் இந்தப் பதிவை அளிக்க விரும்புகின்றோம்.சித்திரை முதல் பங்குனி வரை நமக்கு கிடைத்த விழாக்களின் பட்டியலை இங்கே தருகின்றோம். ஒவ்வொரு விழாவினையும் நேரில் சென்று கண்டு மகிழ ஆசை. இங்கே அனைவருக்கும் படைத்திடவும் ஆசை. அவனைப் பற்றி அறிய விரும்புகின்றோம். அவனே நமக்கு வழிகாட்டி அருள வேண்டும்.
சித்திரை
இலட்ச தீபம்(புத்தாண்டு நாள்) 

பழனி 
சித்திரைத் திருவிழா  
மதுரை 

இந்திர விழா 
காவிரிப்பூம்பட்டினம் 

சித்திரா பௌர்ணமி 
எட்டுக்குடி (தஞ்சை )

திருஞானசம்பந்தர் திருமலைப்பால் விழா   

சீர்காழி
சப்தஸ்தானத் திருவிழா 

திருவையாறு
அப்பர் குருபூசை 
திருவாமூர்,திருப்புகலூர் 

நடைபாவித் திருவிழா (அஸ்தம் ) 

காஞ்சிபுரம் தேவராசப் பெருமாள் கோயில் 
உடையார் உற்சவம் 
ஸ்ரீபெரும்புதூர் 

தெப்பத்திருவிழா 

சுசீந்திரம்
தேர்த்திருவிழா  

திருவாரூர்


வைகாசி
விசாகம்  


திருச்செந்தூர்,திருப்பரங்குன்றம்,காஞ்சி,குமரக்கோட்டம
வசந்த உத்சவம் 
திருவரங்கம், மதுரை
இராமலிங்கப் பிரதிட்டை 

இராமேஸ்வரம
கருட உத்சவம் 
- காஞ்சிபுரம் வரதராசப் பெருமாள் கோயில்
ஆனி
ஆனித்திருமஞ்சனம் 
திருவரங்கம் 

நரசிம்மசாமி உத்சவம் 
திருவல்லிக்கேணி 

ஊஞ்சல் திருவிழா 
மதுரை 

தெப்பத் திருவிழா 
மன்னார்குடி 

படி உத்சவம் 
அழகர்கோவில் 


ஆடி
ஆடிக் கார்த்திகை 
திருத்தணிகை 

ஆடிப்பூரம்
இராமேஸ்வரம், நாகப்பட்டினம் 

பதினெட்டாம்பெருக்கு
பவானி 

ஆடித் தபசு
சங்கரன் கோயில் 

ஆடி சுவாதி 
திருக்கச்சூர் 

ஆடி அமாவாசை
கன்னியாகுமரி,ராமேஸ்வரம், கோடிக்கரை (வேதாரணம்யம்), காவிரிப்பூம்பட்டினம் 

ஆடி செவ்வாய்
முக்கியமான அனைத்து அம்மன் கோயில்களிலும் 


ஆவணி
பிள்ளையார் சதுர்த்தி 

பிள்ளையார்பட்டி, திருவலஞ்சுழி 
ஆவணி மூலம் (பிட்டுத் திருவிழா)
மதுரை 

அருணகிரிநாதர் திருவிழா
திருஅண்ணாமலை, காங்கேயநல்லூர் 

புரட்டாசி 
நவராத்திரி 
மதுரை,தஞ்சாவூர், மயிலாப்பூர், காஞ்சி காமாட்சியம்மன் கோயில்,கும்பகோணம், ராமநாத புரம் அரண்மனை , சிவகங்கை அரண்மனை

ஐப்பசி 
காவேரி விழா ( ஐப்பசி முதல் நாள்) 

திருப்பராய்த்துறை 
கந்த ஷஷ்டி  

திருச்செந்தூர்,சிக்கல், சென்னை கந்தசாமி கோயில்,வடபழனி மற்றும் முருகன் கோயில்கள் அனைத்திலும
சதயம் (ராஜராஜ சோழன் பிறந்தநாள்)

தஞ்சாவூர் 
காவேரி விழா ( ஐப்பசி கடைசி நாள் )

மயிலாடுதுறை 
கார்த்திகை
திருக்கார்த்திகை 

திருஅண்ணாமலை 
கைகீக ஏகாதசி
திருவரங்கம் 

மார்கழி 
திருப்பாவை -திருவெம்பாவை
ஸ்ரீவில்லிபுத்தூர்,மதுரை,திருவுத்தரகோசமங்கை,திருஅண்ணாமலை,
திருப்பெருந்துறை 

திருவாதிரை (ஆருத்ரா தரிசனம் )

சிதம்பரம்,பேரூர்,திருவாலங்காடு,திருவுத்தரகோசமங்கை
வைகுண்ட ஏகாதசி 
திருவரங்கம்,காஞ்சிபுரம்,திருவல்லிக்கேணி 

பகல் பத்து 
ஆழ்வார் திருநகரி 

இராப்பத்து 
திருவரங்கம் 

திருப்புகழ் - திருப்படித் திருவிழா (ஜனவரி முதல் நாள்)
திருத்தணிகை 


தை 
தைப்பூசம்
வடலூர்,பழனி,திருவிடைமருதூர் 

பூபதித் திருநாள்
திருவரங்கம் 

தை அமாவாசை 

இராமேஸ்வரம்,காவிரிப்பூம்பட்டினம்,கோடிக்கரை (தஞ்சை)

 மாசி 
மகா சிவராத்திரி 
இராமேஸ்வரம் 

மாசி மகம் 
கும்பகோணம்,காஞ்சி காமாட்சி அம்மன் கோயில் 


பங்குனி  
அறுபத்து மூவர் விழா
மயிலாப்பூர் 

உத்தரம் 

சுவாமிமலை,பழனி, திருத்தணிகை, சமயபுரம் மணவாள நல்லூர்,காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோயில்,திருவரங்கம்,
திருவாலங்காடு,ஆலங்காட்டு அப்பர் கோயிலில் காரைக்கால் அம்மையாரின் கனி பெறும் விழாவும் நடத்தப்பெறுகின்றது.

தெப்பத்திருவிழா 
திருவாரூர் இவைதவிர இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழாவும், கும்பகோணம் மகாமகத் திருவிழாவும் சிறப்புப் பெறுகின்றன.இத்துடன் ஏதேனும் விழாக்கள் விடுபட்டிருந்தால் தெரிவிக்கவும். அவற்றையும் இணைத்து விடலாம். தற்போது சித்தர் வழிபாடும் மிக பிரசித்தி பெற்று வருகின்றது. வாய்ப்பு இருப்பின் அவற்றையும் தொகுத்து தருகின்றோம். இங்கு தரப்பட்டுள்ள விழாக்களை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். இனிவரும் மாதங்களில் நடைபெற உள்ள விழாக்களில் பங்கு பெறுங்கள். இவை அனைத்தும் எந்த இடைச்செருகல் இன்றி , நம் ஆதி குடிமக்கள் கொண்டாடிய விழாக்கள் ஆகும். தீபாவளி போன்ற விழாக்களை போன்ற இது போன்ற விழாக்கள் நம் கலாச்சாரம், பண்பாடு, வாழ்வியல் அனைத்தும் பேசும். ஏற்கனவே கூறிய வண்ணம்  ஒவ்வொரு விழாவினையும் நாம் இங்கே தொகுத்துத் தர எம் பெருமாள் அருள் புரியட்டும்.

- அடுத்த பதிவில்  மீண்டும் பேசுவோம் 

மீள்பதிவாக:-

கூடுவாஞ்சேரியில் ஒரு திருவிழா - மலையாள சாமி (எ) ஸ்ரீலஸ்ரீ மௌன குரு சுவாமிகள் குரு பூஜை - http://tut-temple.blogspot.com/2018/07/blog-post_17.html

மனக் கஷ்டம் நீங்க..மயிலாண்டவர் திருக்கோவிலுக்கு வாங்க ! - http://tut-temple.blogspot.com/2017/07/blog-post_24.html

மருதேரியில் ஸ்ரீ பதஞ்சலியின் ஆசிகள் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_15.html

உன்னுள் உத்தமனைக் காணும் வழி சாகாக் கல்வி - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_4.html

அருளை அள்ளித்தரும் நவயோகி,தவ யோகி,சிவ யோகி ஸ்ரீமத் சதானந்தபிரம்ம குருதேவதத் சுவாமிகள் - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_82.html

ஜூலை மாத அடியார்கள் பூசை - http://tut-temple.blogspot.com/2018/07/blog-post_11.html

மே மாத அடியார்கள் பூசை - http://tut-temple.blogspot.com/2018/05/blog-post_11.html

மார்ச் மாத அடியார்கள் பூசை - http://tut-temple.blogspot.in/2018/02/blog-post_28.html

திருத்தலங்களின் சிறப்பு - சிவத்திரு.வேதகிரி அவர்கள்  - http://tut-temple.blogspot.com/2017/10/blog-post_12.html

 இனிதே நடைபெற்ற "தேடல் உள்ள தேனீக்களாய் (TUT)" இரண்டாம் ஆண்டு விழா - http://tut-temple.blogspot.com/2018/02/tut_20.html


இந்த பதிவு பற்றிய உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்...🖌