அன்பார்ந்த மெய்யன்பர்களே.
நாம் வாழும் கலிகாலத்தில் ஆரோக்கியம் என்பது கேட்டு பெற இயலாத ஒன்றாக இருக்கின்றது. உணவின் மீதான அரசியல் பல்கி பெருகி விட்டது. நான்காவது உலகப் போர் மூள்வதாக இருந்தால் அது கண்டிப்பாக உணவிற்காக இருக்கும். நாம் என்ன சாப்பிடுகின்றோம்? எப்படி சாப்பிடுகின்றோம்? ஆரோக்கியமாக வாழ நாம் என்ன செய்ய வேண்டும்? என்பது போன்ற பல கேள்விகளுக்கு நடைமுறை வழியில் பதில் சொல்வதுடன் நம்மையும் இயற்கை நல்வாழ்வியல் சார்ந்து வாழ்ந்திட தேனி மாவட்டத்தில் உள்ள இயற்கை நல்வாழ்வியல் அறக்கட்டளை அனுதினமும் இயம்பி வருகின்றார்கள்.
நாமும் சென்ற ஆண்டு, நம் தளத்தின் மூலம் கைகோர்த்து "தமிழ் கூறும் நல்லுலகம்" என்ற தலைப்பில் வாழ்வியல் விழுமியங்களை, சித்தர்களின் சிந்தனைகளில், தமிழ்மொழி தன்னகத்தே கொண்ட சிறப்புகளை அறிந்தோம். அதனை நம் தளத்தில் மீண்டும் ஒரு முறை மீள்பதிவாக இணைத்துள்ளோம்.
சும்மா சொல்லக்கூடாது...எப்படி நிகழ்வு அமையப் போகின்றதோ என்று கலக்கத்தில் தான் ஆரம்பித்தோம். சுமார் 10 நபர்களோடு தொடங்கிய நிகழ்வு இறுதியில் சுமார் 30 பேர் இருக்கும் அளவு இருந்தது. விழா முடிந்தும் அன்பர்கள் தங்கள் கேள்விக்கணைகளை தொடுத்தார்கள். அனைத்து கேள்விகளுக்கும் இயற்கை நல்வாழ்வியல் அறக்கட்டளை நிறுவனர் திரு. K.செல்வகுமார் ஐயா அவர்கள் நிதானமாக பதில் உரைத்தார்கள்.
இதோ..இயற்கை நல்வாழ்வியல் அறக்கட்டளை சென்னையில் வருகின்ற 15/07/2018 அன்று தங்களது 6ஆவது இயற்கை நல்வாழ்வியல் பயிற்சியைத் தர உள்ளார்கள். இந்த பயிற்சியில் கலந்து கொண்டால் இயற்கை என்றால் என்ன? நல்வாழ்வியல் என்றால் என்ன? உடல்,உயிர்,மனம் போன்றவற்றின் அறிவு.ஆற்றல் போன்ற மறைபொருள் தத்துவங்கள் பற்றியும்,மாற்று முறை வாழ்வியல் முறைகள் போன்றவற்றை வாழ்வியல் விழுமியங்களை, சித்தர்களின் சிந்தனைகளில், தமிழ்மொழி தன்னகத்தே கொண்ட சிறப்புகளை அறிந்து கொள்ளலாம்.
வகுப்பிற்கு என்று கட்டணம் ஏதும் இல்லை. இலவச அனுமதி மட்டுமே. முன்பதிவு கட்டாயம் அவசியம். உணவு மற்றும் இன்னபிற தேவைகளுக்கு முன்பதிவு அவசியமாகின்றது. பதிவை படிக்கும் அன்பர்கள் தவறாது பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு, பிழைப்பில் இருந்து வாழ்தல் நோக்கி ஒரு சிறு அடியாவது எடுத்து வைக்கும் படி வேண்டிக் கொள்கின்றோம்.
பயிற்சியில் கலந்து கொண்ட பின்பு:
1. செக்கு எண்ணெய் வாங்குவீர்கள்
2. பிளாஸ்டிக் உபயோகம் குறைப்பீர்கள்
3. பயணத்தில் தண்ணீர் பாட்டில் வாங்க மாட்டிர்கள்
4. சமையலறையில் அஞ்சறைப் பெட்டியில் கவனம் வைப்பீர்கள்
5. கடைகளில் விற்கும் பற்பசை வாங்க மாட்டிர்கள்
6. நீங்களாகவே பல்பொடி தயாரித்துக் கொள்வீர்கள்
7. சோப்பு,ஷாம்பில் இருந்து வெளியே வருவீர்கள்
8. குளியல்பொடி நீங்களாகவே தயாரித்துக் கொள்வீர்கள்
9. இயற்கை மூலிகைகள், காய்கறிகள், பழங்கள் பற்றி மேலும் அறிவீர்கள்
10. உடலில் நோய் தோன்ற காரணம் உணர்வீர்கள்
11. ஆரோக்கியம் பற்றி சிந்திப்பீர்கள்
12. சித்தர்கள் பற்றி பேசுவீர்கள்.
இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். நம்மால் முடிந்த அளவில் பிறருக்கு நன்மை செய்ய வேண்டும் என்று விரும்புவீர்கள்.
எனவே தான் நாம் மீண்டும் மீண்டும் சொல்கின்றோம். கிடைத்திருக்கும் வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். மேலும் விபரங்களுக்கு இணைத்துள்ள அழைப்பிதழை பார்க்கவும்.
இயற்கை நல்வாழ்வியல் அறக்கட்டளை - https://www.facebook.com/pasumai.selvam
- அடுத்த பதிவில் மீண்டும் காண்போம்.
மீள்பதிவாக :-
சதானந்த சுவாமிகள் ஆசிரமத்தில் தமிழ் கூறும் நல்லுலகம் - http://tut-temple.blogspot.com/2017/12/blog-post_26.html
மனமகிழ்ச்சி தந்திடும் மகம் பூசை - சதானந்த சுவாமிகள் ஆசிரமம் - http://tut-temple.blogspot.com/2018/01/blog-post_6.html
தமிழ் கூறும் நல்லுலகம் -வருக ! வருக ! - http://tut-temple.blogspot.com/2017/12/blog-post_5.html
No comments:
Post a Comment