அன்பர்களே...
ஸ்ரீ சற்குரு சுவாமிகள்சுவாமிகள் அகத்தியர் மரபில் 7வது சித்தர் ஆவார். பல இடங்களில் சமாதி உள்ளது. எம்.சுப்புலாபுரத்தில் சுவாமிகளின் குருபூஜையின் போது வெளியூர் ஆட்கள் பூஜை வேலை செய்ய மாட்டார்கள்.ஊரில் உள்ள மக்களே வந்து வேலை செய்யும் மிக அற்புதங்கள் நிறைந்த ஜீவ சமாதி குருபூஜை நடைபெறும் நேரத்தில் சுவாமிகள் எந்த ரூபத்திலாவது வருவார்கள். இதை பார்த்தவர்கள் பல பேர் உண்டு. முகவரி தேனியிலிருந்து10கி.மீ.தொலைவில் இருக்கும எம் (மரிக்குண்டு) சுப்புலாபுரம் கிராமத்தில் இவருடைய சமாதி உள்ளது
திருச்சி மாவட்டத்தில் திருவானைக்கோவில் ஸ்ரீ சற்குரு இராஜயோகத்
திருமடத்தில் அகத்தியர் மரபு வழித் தோன்றலான ஸ்ரீ சற்குரு நாத மாமுனிவர்
1915, ம் வருடம் எண் கோண வடிவிலான கருங்கல் 12 அடி ஆழத்தில், நிலவறை
அமைத்து அதனுள் அமர்ந்து நிர்விகல்ப சமாதி இயற்றி 48 நாட்கள் [ஒரு மண்டலம்]
காற்று,நீர்,உணவு இன்றி தவம் இயற்றி தெய்வீக இறை ஆற்றலை பூரணமாக
வடித்துள்ளார்.இத் திருத்தலத்தில் ஸ்ரீ சற்குரு நாத மாமுனிவர் 1915,ம் வருடம் தவம்
இயற்றிய பிறகு ஒவ்வொரு வருடமும் குருபூஜை இங்கும் மிகச் சிறப்பாக நடைபெற்று
வருகின்றது.
சரி...தேனி மாவட்டத்தில் நடைபெற்ற சுவாமிகளின் குருபூஜை இங்கே காண உள்ளோம்.
சற்குருவே போற்றி! சற்குருவே போற்றி!!
மூன்று நாள் திருவிழாவில் அன்னம்பாலிப்பு செய்த பாத்திரங்களை அங்கிருந்த மூதாட்டி ஒருவர் துலக்கி கொண்டிருந்தார்கள். பார்க்கவே நமக்கு மலைப்பாக இருந்தது. மேலும் குருபூசையில் சாதுக்களுக்கு வஸ்திர தானமும் செய்து உள்ளார்கள்.சாதுக்கள் தரிசனம் அன்றும் கிடைத்தது.
குலா தெய்வ வழிபாட்டிற்கு வீட்டிலிருந்து கிளம்பும் போது கூட, நாம் ஸ்ரீ சற்குரு சுவாமிகள் தரிசனம் கிடைக்கும் என்று நினைக்கவில்லை, அதற்காக துளியளவில் கூட திட்டமும் தீட்டவில்லை. ஆனால் எம் குலதெய்வத்தின் அருளால் அன்று சித்தர் தரிசனம் கிடைக்கப் பெற்றது. நடக்கும் அனைத்து செயல்களுக்கும் அவன் தான் காரணம். நாம் இங்கு ஒன்றுமே இல்லை. என்று உணர்த்தத்தான் இந்த தரிசனம் நமக்கு வாய்க்கப்பெற்றது.
ஸ்ரீ சற்குரு சுவாமிகள் திருப்பாதம் போற்றி. போற்றி !!
- மீண்டும் அடுத்த பதிவில் தரிசிப்போம்.
மீளபதிவாக :-
அழகெல்லாம் முருகனே ... அருளெல்லாம் முருகனே...- http://tut-temple.blogspot.com/2018/06/blog-post_47.html
தேனி சண்முகநாத மலை தரிசனம் (1) - http://tut-temple.blogspot.com/2018/06/1.html
வெற்றி வேல் வீர வேல் - தேனி சண்முகநாத மலை தரிசனம் - http://tut-temple.blogspot.com/2018/05/blog-post.html
இம்மாத மலை தரிசனம் - ஸ்ரீ மிருகண்ட மகரிஷி மலை - http://tut-temple.blogspot.com/2017/08/blog-post_15.html
குழந்தை வரம் அருளும் ஸ்ரீ மிருகண்ட மகரிஷி மலை - தொடர்ச்சி - http://tut-temple.blogspot.com/2017/08/blog-post_19.html
ஸ்ரீ சற்குரு சுவாமிகள்சுவாமிகள் அகத்தியர் மரபில் 7வது சித்தர் ஆவார். பல இடங்களில் சமாதி உள்ளது. எம்.சுப்புலாபுரத்தில் சுவாமிகளின் குருபூஜையின் போது வெளியூர் ஆட்கள் பூஜை வேலை செய்ய மாட்டார்கள்.ஊரில் உள்ள மக்களே வந்து வேலை செய்யும் மிக அற்புதங்கள் நிறைந்த ஜீவ சமாதி குருபூஜை நடைபெறும் நேரத்தில் சுவாமிகள் எந்த ரூபத்திலாவது வருவார்கள். இதை பார்த்தவர்கள் பல பேர் உண்டு. முகவரி தேனியிலிருந்து10கி.மீ.தொலைவில் இருக்கும எம் (மரிக்குண்டு) சுப்புலாபுரம் கிராமத்தில் இவருடைய சமாதி உள்ளது
என்று ஒரு குருபூஜை தகவல் நமக்கு கிடைத்தது. நாமும் சுமார் இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே சுவாமிகள் பற்றி கேள்விப்பட்டிருக்கின்றோம். ஆனால் எப்படி? எப்போது என்று அந்த நாளுக்காக காத்திருந்தோம். அதற்கு முன்னர் சுவாமிகள் பற்றி சில வரிகளில் உணர்வோம்.
ஸ்ரீ சற்குரு சுவாமி அவர்கள் மக்களிடையே உள்ள சாதி சமயம், உயர்வு தாழ்வு, ஆணவம் அகந்தை,என்ற அறியாமையை நீக்கி, எளிய மக்களும் இறைஞானப் பேரருளைப் பூரணமாகப் பெற்று பிறவிப் பயனை எளிதில் அடைவதற்காக அகத்தியர் சித்தர் குரு சீட பரம்பரையில் 9 - வது குருவாக அவதரித்தவர்.இவர் 19 – வது நூற்றாண்டின் ஆரம்பத்தில் தமிழகத்தின் பொதிகை மலை, சுருளி மலை, நீலகிரி மலை, வெள்ளியங்கிரி, பழனி மலை, போன்ற பல்வேறு மலைகளிலும், திருச்சி,தேனீ,நீலகிரி,பழனி போன்ற பல்வேறு ஊர்களில் பூமிக்கடியில் மற்றும் தண்ணீருக்கடியில் பல நாட்கள் வெளியே வராமல் இராஜயோக தவம் செய்து பொதுமக்கள் நன்மையடையும் விதமாக அருளாற்றல் நிரம்பிய பல தவ மையங்கள் அமைத்துள்ளார்.
சரி...தேனி மாவட்டத்தில் நடைபெற்ற சுவாமிகளின் குருபூஜை இங்கே காண உள்ளோம்.
மூன்று நாட்கள் விழாவில் கணேச பூஜை, பஜனை, ஆன் மிக சொற்பொழிவுகள் நடந்தது.
சற்குரு சுவாமியின் படத்தை அலங்கரிக்கப் பட்ட பல்லக்கில் வைத்து
கிராமத்தின் வீதிகள் வழியாக ஊர்வலம் சென்றனர் தமிழகத்தின் பல்வேறு
பகுதியில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆன்மிகவாதி கள், மடாதிபதிகள்
பங்கேற்று பூஜை, வழிபாடுகள் செய் தனர்.
கோயில் வளா கத்தில் அன்னதானம், வஸ்திரதானம் வழங்கும் நிகழ்வும் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தகு குருபூஜை தரிசனம் நமக்கு கிடைக்குமா என்று நாம் ஏங்கிய போது, வாட்ஷாப் செயலி மூலம் கிடைத்த தரிசனம் கண்டு மகிழ்ந்தோம் அடுத்து நாம் இதனை மறந்தும் விட்டோம்.பின்னர் தான் சென்ற வாரம் நாம் தேனிக்கு செல்ல திட்டமிட்டோம். குல தெய்வ வழிபாட்டிற்காக சென்ற வாரம் தேனிக்குசென்றிருந்தோம். தேனிக்கு சென்று ராம்ஜி பொதுநல அறக்கட்டளையில் சென்று நம்பிக்கை பெற்று வந்தோம். பின்னர் அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை ஆண்டிபட்டி அருகில் உள்ள எம் குலதெய்வத்தை சென்று வழிபட்டோம். வழிபாடு முடித்து விட்டு, முச்சக்கர வாகனம் (அதாங்க ஆட்டோ ) மூலம் தேனிக்கு வந்து கொண்டிருந்த போது, அகத்தியர் பற்றி ஓட்டுனரிடம் பேசினோம். அன்றைய தினம் ஆயில்ய நட்சத்திரம்..கூடுவாஞ்சேரியில் ஆயில்ய பூசை இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் என்று சொன்னது தான் தாமதம்..உடனே அவர் இங்கே ஒரு சித்தர் கோயில் உண்டு என்று M.சுப்புலாபுரம் பற்றி கூறினார்.
அட..நேற்று தான் அங்கு குருபூஜை முழுமை பெற்று இருக்கும். இருந்தாலும் நேரில் சென்று தரிசிக்க எண்ணி, பெற்றோரிடம் அனுமதி கேட்க, சம்மதம் சொன்னார்கள். உடனே அங்கு சென்றோம். தேனியில் சித்தர்கள் வழிபாட்டில் சுருளி மௌனச் சித்தர், மிருகண்ட மகரிஷி மலை என்று தான் தெரியும். இதனைத் தாண்டி இப்பொது தான் தேடிக் கொண்டிருக்கின்றோம்.அந்த வகையில் தான் ஸ்ரீ சற்குரு சுவாமிகள் தரிசனம் நமக்குக் கிடைத்தது.

ஆண்டிபட்டியில் இருநது தேனி செல்லும் வழியில் கானாவிலக்கு பிரிவில் சென்றோம். அந்த பாதையில் முதல் பயணம். லேசான சாரல் மழை ..தென்றல் தவிலும் தேனியில்..மழையும் சேர, மனம் பூத்துக் குலுங்க..சித்தர் தரிசனம் எப்படி இருக்குமோ என்ற கேள்வியோடு கோயிலை அடைந்தோம். குருபூஜை என்பதால் கீற்றுக் கொட்டகை போட்டிருந்தார்கள். நேரில் உள்ளே சென்றதும் மூத்தோன் தரிசனம். வினை நீக்கும் விநாயகர் தரிசனம் பெற்று, குருக்களிடம் சற்குரு சுவாமிகள் பற்றி விசாரித்தோம். அவர்கள் தெரியவில்லை என்று பதில் கூறினார்கள்.
சுவாமிகள் சன்னிதி இருந்தது.அங்கிருந்து சற்குரு, சற்குருவே என்று தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தது. உள்ளே ஒருவர் சற்குருவை அழைத்துக் கொண்டிருப்பதாக தெரிந்தது. குருக்களிடம் படம் எடுக்க அனுமதி கோரினோம். அவர்கள் உடனே விளக்கினை தூண்டிவிட்டார்கள். ஒளி வெள்ளத்தில், சற்குரு, சற்குருவே என்ற ஒலி வெள்ளத்தில் ஐம்பொறியும் அடங்கியது. உங்களுக்காக இதோ அந்த தரிசனம் இணைத்துள்ளோம்.
சற்குருவே போற்றி!
சற்குருவே போற்றி! சற்குருவே போற்றி!!
பின்னர் கோயிலை சுற்றி படம் எடுத்தோம். மீண்டும் ஒரு வாய்ப்பில் நம்மை அழைக்கும் படி, சற்குருவிடம் வேண்டினோம். குழுவில் உள்ள அனைவருக்காகவும் பிராத்தனைசெய்தி அங்கிருந்து புறப்பட்டோம்.
மூன்று நாள் திருவிழாவில் அன்னம்பாலிப்பு செய்த பாத்திரங்களை அங்கிருந்த மூதாட்டி ஒருவர் துலக்கி கொண்டிருந்தார்கள். பார்க்கவே நமக்கு மலைப்பாக இருந்தது. மேலும் குருபூசையில் சாதுக்களுக்கு வஸ்திர தானமும் செய்து உள்ளார்கள்.சாதுக்கள் தரிசனம் அன்றும் கிடைத்தது.
குலா தெய்வ வழிபாட்டிற்கு வீட்டிலிருந்து கிளம்பும் போது கூட, நாம் ஸ்ரீ சற்குரு சுவாமிகள் தரிசனம் கிடைக்கும் என்று நினைக்கவில்லை, அதற்காக துளியளவில் கூட திட்டமும் தீட்டவில்லை. ஆனால் எம் குலதெய்வத்தின் அருளால் அன்று சித்தர் தரிசனம் கிடைக்கப் பெற்றது. நடக்கும் அனைத்து செயல்களுக்கும் அவன் தான் காரணம். நாம் இங்கு ஒன்றுமே இல்லை. என்று உணர்த்தத்தான் இந்த தரிசனம் நமக்கு வாய்க்கப்பெற்றது.
ஸ்ரீ சற்குரு சுவாமிகள் திருப்பாதம் போற்றி. போற்றி !!
- மீண்டும் அடுத்த பதிவில் தரிசிப்போம்.
மீளபதிவாக :-
அழகெல்லாம் முருகனே ... அருளெல்லாம் முருகனே...- http://tut-temple.blogspot.com/2018/06/blog-post_47.html
தேனி சண்முகநாத மலை தரிசனம் (1) - http://tut-temple.blogspot.com/2018/06/1.html
வெற்றி வேல் வீர வேல் - தேனி சண்முகநாத மலை தரிசனம் - http://tut-temple.blogspot.com/2018/05/blog-post.html
இம்மாத மலை தரிசனம் - ஸ்ரீ மிருகண்ட மகரிஷி மலை - http://tut-temple.blogspot.com/2017/08/blog-post_15.html
குழந்தை வரம் அருளும் ஸ்ரீ மிருகண்ட மகரிஷி மலை - தொடர்ச்சி - http://tut-temple.blogspot.com/2017/08/blog-post_19.html
No comments:
Post a Comment