அடியார் பெருமக்களுக்கு வணக்கம்.
உன்னுள் உத்தமனைக் காணும் வழி - மஹான் சாங்கு சித்தர் அவர்களின் 119 ஆவது குரு பூஜை என்ற பதிவில் தாத்தா அவர்களைப் பற்றி பார்த்தோம். என்னப்பா? தீடிரென தாத்தா என்று அழைக்கின்றாய் என்கின்றீர்களா? தாத்தா என்று அழைப்பது அவருக்கு ரொம்ப பிடிக்கும். நாம் தான் சித்தர்களை ஒரு வித கண்ணோட்டத்தில் காண்கின்றோம். ஆனால் உண்மையில் அவர்கள் நம் உறவில் வரும் உத்தமர்களே. இன்றைய பதிவில் 119 ஆவது குருபூஜையின் அருள் வெள்ளத்தை இங்கே இணைக்கின்றோம்.
118 ஆவது குருபூஜையைப் பற்றி நம் தளத்தில் தகவல் வெளியிட்டோம். அடுத்து அப்படியே நம் பயணம் போய்க் கொண்டிருந்தது. சித்தர்களின் அருளினால் சுமார் 1 மாதம் முன்பு திருஅண்ணாமலை சென்று இருந்தோம். அங்கே நம் கையில் 119 ஆவது குருபூஜை அழைப்பு கிடைத்தது. ஆஹா. தாத்தாவை தரிசித்து ஓராண்டு ஆகிவிட்டதே என்று மனம் வெம்பியது. பின்னர் நம் தளத்தில் 119 ஆவது குருபூஜையைப் பற்றி தெரிவித்தோம். அன்றைய தினம் நம் தள நண்பர் திரு.குமார் ஐயா அவர்கள் நேரிடையாக சென்று நமக்கு குருபூஜை பற்றி அளித்த நிலைகளை இங்கே பகிர்கின்றோம்.
உன்னுள் உத்தமனைக் காணும் வழி என்று நம் தாத்தா மீண்டும் மீண்டும் உரைப்பது
கள்ளப் புலன்ஐந்தும் காள மணிவிளக்கே.”
என்று தான். ஆம். புறத்தில் தேடல் ஒரு நிலையில் முழுமை பெற்று, அகத்தின் தேடல் தொடங்க வேண்டும் என்று மறைமுகமாக தாத்தா கூறுகின்றார்.
நம்முடைய உள்ளமே பெருங்கோயிலாக இருக்கிறது. ரத்தம்,தசை,எலும்பு போன்றவற்றால் ஆன நமது உடலினுள் அந்தக் கோயில் இருப்பதால், நமது உடம்பு ஓரு ஆலயமாகத் திகழ்கிறது.
ஆக, ஆலயம் என்பது கோயில்களை உள்ளடக்கியது.ஆலயம் வேறு:கோயில் வேறு: பற்பல கோயில் இணைந்த இடமே ஆலயம். நம் எனும் கோவில்,இந்த உடம்பு என்ற ஆலயத்தில் இருக்கின்றது.
இறைவன் நம்முடைய மனதின் தேவைகளை அறிந்து அனைத்தையும் வழங்குவதால் வள்ளலாக இருக்கிறார். அந்த வள்ளலை அடைவதற்காக எந்நேரமும் அவனது ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரித்துக்கொண்டிருப்பதால், நமது வாய், நமது உடலென்னும் ஆலயத்தின் கோபுரவாசலாக நிற்கிறது. இறைவனை அடைவதற்கான வழிகளை அறிந்து தெளிந்தவருக்கு அவரது ஆன்மாவே சிவரூபமாக, அதாவது சிவலிங்கமாக இருக்கிறது. அவர்களால் தம்மைத் தவறான வழியில் இட்டுச் செல்லும் ஐம்புலன்களையும் அடக்கி ஆள முடியும். அவர்களுக்கு அந்தக் கள்ளப் புலன்கள் அழகிய விளக்காக மட்டுமே தெரியும். ஆனால் நமக்கு இந்த புலன்கள் அடங்கா. அனுபவிக்க அனுபவிக்க வேண்டும் என்றே சொல்லும். சுருக்கமாக சொன்னால், இந்த புலன்கள் நமக்கு உணர்ச்சி நிலையில் உள்ளது. ஆனால் மகான்களுக்கு உணர்வு நிலையில் உள்ளது.
அப்படி என்றால் நம் உடம்பினுள் உள்ள உள்ளத்தில் உறைகின்ற உத்தமனைக் காண வேண்டும் அல்லவா? அந்த உத்தமனை கண்டால் தான் நாமும் கள்ளப் புலன்களைக் கொண்டு உணர்ச்சி நிலையில் இருந்து,உணர்வு நிலைக்கு மாற்றம் பெற முடியும்.இதற்கு பதில் சொல்கின்றார் கிண்டியில் உள்ள சித்தர் பெருமான் சாங்கு சித்த சிவலிங்க நாயனார்.அவரது ஜீவசமாதியில் நுழையுமுன் நம் கண்ணில்படுவது, தமது மாணவர்களுக்கு அவர் கூறிய அறிவுரைதான்.
“காடான ஐம்புலக்காட்டி னிலிருந்துஉன் ஊர்
கரைசேர திருவருள் புரி
கருணைவழி பரவை நிகரறிவிலறிவாய் முளைக்
கண்ணுடைய வள்ளல் குருவே”.
என்று உரைக்கின்றார்,
இவரது இயற்பெயர் சிவலிங்கம் என்பதாகும். மெய்ஞான நூல்களை கற்று வள்ளலாரிடம் சமையல் வேலையில் இணைந்தார். அவர் மூலமே ஞானம் பெற்று யோக கலையில் சித்தி பெற்றார். இரண்டடி உயரத்தில் தியானம் செய்தல், நவகண்ட யோகம் எனும் உடல் பாகங்களை கூறு போட்டு சிவபெருமானை நோக்கி யோகம் செய்தல் போன்ற யோகங்களை செய்தார்.
இவரது யோக வல்லமை பற்றி அறிந்த துரைமகனார் என்பவர் சித்தருக்கு கிண்டியில் சுப்பா காலனியில் இடம் கொடுத்தார். அங்கு பக்தர்களுக்கு பல்வேறு சித்துகளை செய்து அருளினார். தத்துவார்த்தம், பக்தி, சித்து, யோகம் போன்றவற்றை அறிந்திருந்தார். செப்புக் காசுகளை பொற்காசுகளாக மாற்றும் ரசவித்தை மூலமாக பொன்னாக பக்தர்களுக்கு தந்தார். அதை மறுப்பவர்களிடம் ஞான உபதேசம் செய்துள்ளார். சமாதி நிலையை அடையும் காலத்தினை முன்பே தெரிவித்து 1900ம் ஆண்டு ஜூலை 12ம் தேதி பவுர்ணமி நாளில் வியாழக்கிழமையன்று ஜீவசமாதியடைந்தார்.

தாத்தாவின் குருபூஜை நிகழ்வு ஒவ்வொன்றும் தேனில் ஊறிய பலா போல் தான் இருந்தது. சென்ற வாரம் சென்று அங்கே சற்று அமர்ந்தோம். அப்போது உள்ளே ஒரு மன அமைதி கிடைத்தது. வாய்ப்புள்ள அன்பர்கள் நேரில் சென்று அங்கே பரிபூரணம் பெறவும்.
- மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.
மீள்பதிவாக:-
உன்னுள் உத்தமனைக் காணும் வழி - மஹான் சாங்கு சித்தர் அவர்களின் 119 ஆவது குரு பூஜை - http://tut-temple.blogspot.com/2018/06/blog-post_13.html
உன்னுள் உத்தமனைக் காணும் வழி சாகாக் கல்வி - http://tut-temple.blogspot.com/2017/07/blog-post_4.html
No comments:
Post a Comment