Subscribe

BREAKING NEWS

25 July 2018

சித்தர் தரிசனம் : தீர்த்த மலை அடிவாரத்தில் ஜடை சாமியார்


இன்றைய சித்தர் தரிசனம் பதிவில் தீர்த்த மலை அடிவாரத்தில் ஜடை சாமியார்  பற்றி அறிய இருக்கின்றோம். ஏற்கனவே தீர்த்தமலை தரிசனம் பற்றி தந்துள்ளோம். மீண்டும் ஒருமுறை படித்துவிட்டு சித்தர் அருள் பெறுவோம்.

தீர்த்தமலை 

ஒரே மலையில் ஐந்து தீர்த்தங்கள். ஐந்து தீர்த்தங்கள் இங்கே இருப்பதால் தான் பேரே தீர்த்தமலை என்று உருவாகி உள்ளது.இந்த மலையில் இறைவன் சிவபெருமான் எழுந்தருளி இருக்கிறார். இங்கிருக்கும் சிவபெருமான் தீர்த்தகிரீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். இங்கு ஓடி வரும் புனித நீரூற்றுகளில் குளித்தால் நமது பாவங்கள் எல்லாம் அழிந்துவிடும் என்று இந்த பகுதியில் இருக்கும் மக்கள் நம்புகின்றனர்.

தர்மபுரிக்கு அருகில் அமைந்திருக்கும் தீர்த்தமலை மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு ஆன்மீக தலமாகும். இந்த தலம் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரூருக்கு அருகில் அமைந்துள்ளது.

 தீர்த்தமலையின் உச்சியில் அமைந்துள்ளது இந்த தீர்த்தகிரீஸ்வரர் கோயில். இது மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாகவும், தெற்கில் சிவபெருமான் வாழும் இடமாகவும் நம்பப்படுகிறது.

தீர்த்தமலை யாத்திரையில் அடிவாரக்கோயிலில் இருந்து நாம் புறப்படும் போது, சரியாக வனத்துறை தாண்டிய பகுதியில் இடப்புறமாக இந்த ஜடை சாமியார் அருள்பாலிக்கின்றார்.

சுவாமிகள் பற்றி அங்கே கேட்டுப் பார்த்தோம். பதில் ஏதும் கிடைக்கவில்லை. மனம் ஒன்றி அமர்ந்தோம். சிவன்,விநாயகர் என தரிசித்தோம். அந்த தரிசன படங்களை இங்கே பதிவேற்றுகின்றோம்.


இவர் தாங்க ஜடை சாமியார். 



சிவனார் தரிசனம் பெற்றோம்.


அடுத்து விநாயகர் தரிசனம் பெற்றோம். இங்கே இரட்டை பிள்ளையார் தரிசனம் நமக்கு கிடைத்தது. அடுத்த முறை வாய்ப்பு கிடைத்தால் மேலதிக விபரங்கள் சேர்க்கலாம்.










தீர்த்தமலை யாத்திரையின் ஏற்றத்தின் போது நாம் ஐயாவினை தரிசிக்கவில்லை. மேலிருந்து கீழே இறங்கி வந்த போது தான் அதாவது மலை இறக்கத்தில் தான்  ஜடை சாமியார்  தரிசனம் நமக்குக் கிடைத்தது. மிக மிக அமைதியான இடம். இயற்கை சூழல்..வனத்தின் நீட்சியில். மனத்தின் நீட்சி ஒடுங்கியது. நம் தள உறவுகள் அனைவருக்குமான மனதில் பிரார்த்தித்தோம். மீண்டும் எப்போ அழைப்பாரோ? என்று மன ஏக்கத்துடன் அங்கிருந்து விடை பெற்றோம்.

தீர்த்தமலை யாத்திரை என்று திட்டமிட்டால் தீர்த்தகிரி அடிவாரக் கோயில் , ஜடை சாமியார்  கோயில், தீர்த்தமலை ஐந்து தீர்த்தங்களில்  நீராடல், தீர்த்தமலை அகஸ்தியர் ஆசிரமம் என சென்று வரலாம்.

- அடுத்த பதிவில் மீண்டும் சந்திப்போம்

மீள்பதிவாக:-

வாழ்வில் திருப்பங்கள் தரும் தீர்த்தகிரி யாத்திரை - http://tut-temple.blogspot.com/2018/03/blog-post_12.html

தீர்த்தகிரி அடிவாரக் கோயில் தரிசனம் - http://tut-temple.blogspot.com/2018/03/blog-post_17.html 

ஸ்ரீகுருமண்டலம் அகஸ்தியர் ஆஸ்ரமம் - 7 ஆம் வருட வருஷாபிஷேக விழா அழைப்பிதழ் - http://tut-temple.blogspot.com/2018/06/7.html

ஓம் அகஸ்த்திய நாதனே - ஸ்ரீ குருமண்டல தெய்வமே ! - http://tut-temple.blogspot.in/2018/03/blog-post_76.html

ஸ்ரீ ராமரின் வழியில் தீர்த்தகிரி யாத்திரை - http://tut-temple.blogspot.in/2018/03/blog-post_8.html

யாத்திரையாம் யாத்திரை ...தீர்த்தகிரி யாத்திரை - http://tut-temple.blogspot.in/2018/03/blog-post_7.html

No comments:

Post a Comment