அடியார் பெருமக்களுக்கு வணக்கம்.
இரண்டு பதிவுகளுக்கு முன்னர், கூடுவாஞ்சேரியில் ஒரு திருவிழா - மலையாள சாமி (எ) ஸ்ரீலஸ்ரீ மௌன குரு சுவாமிகள் குரு பூஜை என்று ஒரு பதிவு அளித்தோம். அதில் அடுத்த பதிவில் மௌன குரு சுவாமிகள் தரிசனம் என்று கூறியிருந்தோம்.அந்தப் பதிவின் தொடர்ச்சியாக இன்று தரிசிக்க இருக்கின்றோம்.
மீண்டும் ஒரு முறை சுவாமிகள் பற்றிய குறிப்பு
சுவாமிகள் பூர்விகம் பற்றிய செய்திகள் சரியாக தெரியவில்லை. சென்னை கூடுவாஞ்சேரி நந்திவரத்தில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் பூசை செய்தவர். இவர் சித்த வைத்தியத்தை பற்றியும் தெரிந்து வைத்திருந்தார். சித்துகள் பல செய்தவர். கோயிலின் முன் உள்ள குளத்தில் உள்ள தண்ணீரின் மேல் அமர்ந்து இருப்பதை மக்கள் பார்த்துள்ளனர். வாணி செட்டியார் என்பவர் இடம் இருந்து அறுபத்தி எட்டு ஏக்கர் நிலத்தை வாங்கி, 1912 ஆம் ஆண்டு திருக்கோயிலுக்கு எழுதி வைத்தார். 17/7/37 ஆம் ஆண்டு மாலை 5 மணிக்கு சிவானந்த பெரு வாழ்வு எய்தினார். கூடுவாஞ்சேரி நந்திவரத்தில் காசிவிஸ்வநாதர் கோயில் பின்புறம் உள்ள நந்திஸ்வரர் காலனி, குளக்கரை தெரு, 108 ஆம் எண்ணில் உள்ள வீட்டின் பின்புறம் ஜீவசமாதி இருக்கிறது. ஆடி விசாகம் அன்று சுவாமிகளின் குருபூஜை கொண்டாடப்பட்டு வருகின்றது.
நந்திவரம் கூடுவாஞ்சேரியில் நந்தீஸ்வரர் காலனியில் உள்ள 108ம் எண்ணில் உள்ள வீட்டின் உள்ளே சுவாமிகள் அருள்பாலித்து வருகின்றார். வெளியே உயிர்நிலை கோயில் இருப்பதற்கான எந்த அறிவிப்பும் இல்லை. ஆனால் திருக்கோயிலை தினசரி பூஜை செய்து நன்கு பராமரித்து வருகின்றார்கள். அந்த இடமே பசுமையாக இருந்தது. இதோ சுவாமிகள் தரிசனம் உங்களுக்காக.. எத்தனை ஆண்டு தவமோ? யாம் அறிந்திலோம் ஈசா...
- மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.
மீள்பதிவாக:-
கூடுவாஞ்சேரியில் ஒரு திருவிழா - மலையாள சாமி (எ) ஸ்ரீலஸ்ரீ மௌன குரு சுவாமிகள் குரு பூஜை - http://tut-temple.blogspot.com/2018/07/blog-post_17.html

கோயிலில் இருந்த அறிவிப்பில்...
நந்தியெம்பெருமான் தரிசனம்
சுவாமிகளை கவனித்து வந்தவர்கள் இங்கேயே சித்தி அடைந்து உள்ளார்கள். இருவரும் (கணவன், மனைவி ) அங்கேயே உள்ளார்கள்.
வருகின்ற ஞாயிற்றுக்கிழமை(22/7/2018) ஆடி விசாகம் அன்று 81 ஆவது குருபூசை விழா சிறப்பாக நடைபெற உள்ளது. வாய்ப்புள்ள அன்பர்கள் கலந்து கொண்டு குருவருளும் இறையருளும் பெறும்படி வேண்டுகின்றோம்.
- மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.
மீள்பதிவாக:-
கூடுவாஞ்சேரியில் ஒரு திருவிழா - மலையாள சாமி (எ) ஸ்ரீலஸ்ரீ மௌன குரு சுவாமிகள் குரு பூஜை - http://tut-temple.blogspot.com/2018/07/blog-post_17.html
No comments:
Post a Comment