Subscribe

BREAKING NEWS

21 July 2018

ஜாதகத்தை சாதகமாக மாற்றித் தரும் குழந்தைவேல் சுவாமிகள் உழவாரப் பணி தொடர்ச்சி ...

அனைவருக்கும் வணக்கம்...

இரண்டு பதிவுக்கு முன்னர் நாம் தொடங்கிய உழவாரப் பணி பதிவின் தொடர்ச்சியே இந்தப் பதிவாகும். உழவாரப் பணி ஏன் செய்ய வேண்டும்? எப்படி செய்ய வேண்டும் என்பது போன்ற கேள்விகளுக்கு சென்ற பதிவிலே சற்று தொட்டுக் காட்டினோம். உழவாரப் பணியைப் பொறுத்தவரை நாம் இந்தக் கோயிலில் செய்யலாம் என்று முடிவெடுக்க முடியாது. அனைத்தும் அந்த பரம்பொருளின் வசமே ஆகும். நம்மால் இங்கு தீர்மானிக்க முடியாது. இதனை நாம் பல முறை உணர்ந்திருக்கின்றோம். இந்த உழவாரப் பணியும் அப்படியே. அதே போல், பொதுவாக ஆன்மிகம் சார்ந்த சேவை,தொண்டுகளுக்கும் அனைவராலும் சென்று விட முடியாது. யாருக்கெல்லாம் பிராப்தம் இருக்கின்றதோ, அவர்களால் மட்டுமே இது போன்ற நல்ல விஷயங்களில் ஈடுபாடு கொண்டு, தொண்டு செய்ய முடியும்.

உழவாரப் பணியைத் தொடர்வோம். ஆடவரும், மகளிர் அணியும் ஒன்றுக்கொன்று சளைக்காது சேவையில் ஈடுபட்டனர். அதன் பலனைக் கண்ணால் கண்டால் தானே நன்றாக இருக்கும். இதோ மகளிரின் கை வண்ணத்தில் மிளிரும் பாத்திரங்கள்,பிரபை அனைத்தும் இங்கே. இங்கேயாவது பரவா இல்லை. நாம் சென்ற முறை திருமால் மருகன் ஆலய உழவாரப் பணியை நீங்கள் பார்த்தல் பிரமித்துப் போவீர்கள்.விரைவில் தனிப்பதிவில் சந்திப்போம்.







அடுத்து அங்குள்ள சன்னிதியில் அருள்பாலிக்கும் விநாயகர் மற்றும் குழந்தைவேல் சுவாமிகளின் திருவுருவப் பகுதியை சுத்தம் செய்தார்கள்.





தம்பி வினோத்  தூண்களை சுத்தம் செய்த காட்சி 








உழவாரணியின் தூண் என்றால் அது நம் சந்திரசேகரன் அண்ணா தான், தரையை கூட்டி சுத்தம் செய்ய நீர் ஊற்றும் காட்சி



அட..நந்தியெம்பெருமானை குளிப்பாட்டி, சுத்தம் செய்வதை நீங்களே பாருங்கள்.












சுமார் 12:30   மணி இருக்கும். சந்நிதியைத் தூய்மை செய்து, தரையை  நீரால் கூட்டி என அனைத்தும் ஒருவாறு செய்து முடித்தோம். அடுத்து வழிபாட்டிற்கு அமர்ந்தோம்.



அருகு சாற்றி விநாயகர் தரிசனம். அனைவரின் தீவினை களைய பிரார்த்தித்தோம்.







இதோ..நீங்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் தீப தரிசனம். அனைவரின் ஜாதகம் வாங்கி, குழந்தைவேலரிடம் சமர்ப்பித்து, இதோ..தீபாராதனை.. அப்பப்பா..தெய்வ தரிசனம் பெற்றோம். கண்களில் ஒற்றிக்கொண்டோம். மனதில் மகிழ்ச்சி பெற்றோம்.







அடுத்து, குருக்களுக்கு மரியாதை செய்த காட்சி







குழந்தைவேலரின் ஆசி அன்று வந்திருந்த அனைவருக்கும் கந்தர் அனுபூதி கொடுக்கலாயிற்று.வழக்கமாக நாமே இந்த புத்தகம் வாங்குவோம்.இம்முறை நம்மை அழைத்து, சரியாக வாங்கிக் கொண்டு வந்து சேர்ப்பித்த சரஸ்வதி சகோதரிகளுக்கு நன்றி.






உழவாரப் பணி செய்ய வாய்ப்பு வழங்கிய குருக்களுக்கும், திருமதி. வசந்தி அவர்களுக்கும் நம் நன்றியை இங்கே தெரிவித்துக்கொள்கின்றோம். அடுத்து என்ன? பிரசாதம் தான். அனைவருக்கும் நல்ல பசி எடுக்க ஆரம்பித்து விட்டது.





குழுவை ஒருங்கிணைத்து படம் எடுத்து விட்டு, பிரசாதம் சாப்பிட உட்கார்ந்தோம். ஏனெனில் இது போன்ற நிகழ்வே வாழ்வின் உயிர்ப்பாய் நின்று பேசும். மறுபடியும் இது போல் அனைவரும் குழுவாக ஒன்றிணைப்பது நம் கையில் இல்லை.மறுபடியும் சொல்லில் அடங்கா தரிசனம், களைப்புற்ற சேவை தந்த உழவாரம், புதிய அன்பர்கள் இணைப்பு, வயிற்றுக்கு உணவாக உணவு என அனைத்தும் இனிப்பாக இருந்தது.






இம்முறை சாம்பார் சாதம், தயிர் சாதம், புளி சாதம் என அமர்களப்படுத்தி விட்டார்கள். வழக்கம் போல் நாம் ஒரு கட்டு கட்டினோம். இறை பிரசாதம் இனிமையாக இருந்தது. 




அன்றைய தினம் பிரதோஷம் என்பதாலும், அக்னி நட்சத்திரம் ஒட்டி இருந்ததாலும் மக்கள் அனைவரும் வெயில் போன்ற இயற்கை சீற்றத்தில் அதிகம் பாதிக்காத வண்ணம் இருக்க வேண்டும். இளநீர் அபிஷேகம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நம்மால் அன்று கலந்து கொள்ள முடியவில்லை.இருப்பினும் மீண்டும் ஒருமுறை வாய்ப்பு தரும்படி குழந்தைவேல் சுவாமிகள் பாதத்தில் சரண் அடைந்து விட்டு. அங்கிருந்து விடை பெற்றோம். ஜாதகம் வைத்து வேண்டிய ஒரு சிலருக்கு மாற்றங்கள் வந்து கொண்டிருப்பதை கண்டோம். இம்முறையும் அனைத்தும் அனைவருக்கும் அருளப்படும்.

- மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.   

மீள்பதிவாக :-

குதூகலம் அள்ளித் தந்த குழந்தைவேல் சுவாமிகள் உழவாரப் பணி - http://tut-temple.blogspot.com/2018/07/blog-post_20.html

மீண்டும் மீண்டும் நம்மை அழைக்கும் குழந்தைவேல் சுவாமிகள் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.com/2018/05/blog-post_21.html

சித்திரை பூசத்தில் குழந்தைவேல் சுவாமிகளிடம் சரண் அடைவோம் - http://tut-temple.blogspot.in/2018/04/blog-post_21.html

ஜாதகத்தை மாற்றி சாதகமாக்கும் குழந்தைவேலர் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_77.html

 ஜாதகத்தையே மாற்றும் குழந்தைவேலர்... - http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_22.html

 என் கடன் பணி செய்து கிடப்பதே - உழவாரப் பணி - http://tut-temple.blogspot.in/2017/08/blog-post_24.html

No comments:

Post a Comment