Friday, July 27, 2018

இன்றைய குரு பூர்ணிமா தரிசனம் - மதியேது விதியேது கதியுந்தன் பொற்பாதமே

அன்பின் அடியார்களே..

இன்று குரு பூர்ணிமா. இன்று குருவை கொண்டாட வேண்டிய நாள். அவரிடம் ஆசி பெற வேண்டிய நாள். அவர் நாமத்தை உச்சரிக்க வேண்டிய நன்னாள். அவர் சொல்லிக் கொடுத்த வித்தையை செய்ய வேண்டிய நாள். வழக்கமாக பௌர்ணமி தோறும் அண்ணாமலையார் தரிசனம் பெறுவது உறுதி. இம்முறை வேறொரு வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த அனுபவத்தை மற்றொரு பதிவில் காண்போம். நம்மை பொறுத்த வரை நாம் சித்தர்களின் மார்க்கத்தில் சென்று கொண்டிருக்கின்றோம். இதற்கு முதன் முதலில் பிள்ளையார் சுழி போட்டவர் ..வாழ வழிகாட்டும் குருவாய் விளங்கும் அகத்தியர் பெருமான் தான். அவரைப் பற்றி பேசாது, காணாது இந்த நன்னாளை நாம் கடத்திட விரும்பவில்லை.

அதே போல் இந்த நன்னாளில் நாம் நமக்கு வழிகாட்டியாக இருந்த/ இருக்கின்ற அனைவரையும் நினைவு கூர்ந்து வணங்குகின்றோம்.

பள்ளிப்பருவம் தொட்டு கல்லூரி பருவம் வரை சுவாமிஜி அருட்தந்தை வேதாத்திரி மகரிஷியின் வழிகாட்டல் இருந்தது. கால ஓட்டத்தில் அனைத்தும் விடுத்து இருந்த சூழலில் மீண்டும் குருவின் அருளால் ஆட்கொள்ளப் பட்டோம். என்னே குருவின் கருணை! நாம் விட்டாலும் குரு நம்மை விடாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்றால் அது எம் பெற்றோரின் புண்ணியப் பலனே. நாம் தரிசிக்கும் சித்தர்கள் அனைத்திற்கும் அவர்களே தான் காரணம் என்று நினைக்கின்றோம். சென்னை வந்து சுமார் 10 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில். தற்போது நான்கு ஆண்டுகளாக கூடுவாஞ்சேரியில் இருக்கின்றோம்.

இங்கு வந்தும், வேதாத்திரி மகரிஷி பிறந்து வளர்ந்த ஊர் இது என்று நாம் எண்ணி இருக்கின்றோம் தவிர, அவர் வாழ்ந்த வீடு, கூடுவாஞ்சேரி அறிவு திருக்கோயில் பக்கம் எட்டிக் கூட பார்க்கவில்லை. இதற்கும் நாட்கள் தேவைப்பட்டன. கூடுவாஞ்சேரி வந்து சுமார் ஐந்தாறு மாதங்கள் கழிந்த நிலையில் ஒரு புத்தாண்டு தினத்தில் அப்படியே சைவ உணவு உட்கொள்ள ஆரம்பித்தோம். ஏன்? எப்படி ? என்று தெரியவில்லை. தேனியில் இருக்கும் போது பல முறை தவத்தில் குருவோடு ஒன்றி உயிர் கலப்பு பெற்றதன் பயனா இது? இருக்கலாம் என்றே தோன்றியது. அடுத்து தற்போது சுமார் ஐந்து மாதங்களுக்கு முன்னர் அருட்தந்தை வேதாத்திரி மகரிஷியின் பேரன் திரு. சிவ ஞானம் அவர்களை சந்தித்தோம். அப்படியே அறிவுத்திருக்கோயிலுக்கு தினமும் சென்று வருகின்றோம். இது தான் வேதாத்திரி மகரிஷி நமக்கு காட்டிக் கொண்டிருக்கும் அருள் ஆணை.

அடுத்து, நாம் இப்படியொரு தளத்தினை ஆரம்பிக்க இருக்கின்றோம் என்று கனவிலும் நினைக்க வில்லை. இப்படியொரு தர்மத்தினை சார்ந்து வாழப் போகின்றோம் என்றும் நினைக்கவில்லை. ஆனால் இவை அனைத்தும் நிகழ்த்தப்படுகின்றன. உழவாரப்பணி என்ற சொல்லை நமக்கு சொல்லிக்காட்டி, அனுபவத்தையும் தந்து தானம் போன்ற செய்திகளை எடுத்துரைத்த திரு.ரைட்மந்த்ரா சுந்தர் அவர்களையும் இந்த நன்னாளில் நினைவு கூறுகின்றோம். ஏதோ அவர் விட்டுச் சென்ற பணியை கடுகளவில் நம் "தேடல் உள்ள தேனீக்களாய்" குழுவின் மூலம் செய்து வருகின்றோம் என்று நாம் நம்புகின்றோம். அவரின் ஆசிகள் என்றும் வேண்டுகின்றோம்.

அடுத்து இந்த பயணத்தில் எண்ணற்ற சான்றோர் பெருமக்கள் இணைந்து வழிகாட்டி வருகின்றார்கள். அனைவரின் பெயரையும் இங்கே குறிப்பிட விரும்புகின்றோம். யார் பெயராவது இங்கே இணையத்தில் விடுபட்டிருக்கலாம். ஆனால் என்றும் நீஙகள் நம் இதயத்தில் இருந்துகொண்டு உள்ளீர்கள் என்பது திண்ணம். அன்னதானம் எப்படி செய்வது என்று கற்றுக்கொடுத்த ஜீவ அமிர்தம் திருமுருகன். அடுத்து நாம் அன்னதானம் செய்ய தற்போது வரை பொருளுதவி செய்து ஊக்குவித்து வரும் அகதியர்வனம் மலேசியா குழுவிற்கு நம்  நன்றி.

இவ்வாறாக செல்லும் போது, மீண்டும் முதல் பத்திக்கே வருகின்றோம். சித்தர்களில் முதன்மையான சித்தர் அகத்தியர் தான் இங்கே சிறப்பாக தரிசனம் தர உள்ளார். அவர் மட்டுமா? அடுத்து நம் தளத்திலே ஏகப்பட்ட குருமார்கள், சித்தர்கள் என தொட்டுக் காட்டியுள்ளோம். பெருங்களத்தூர் சதானந்த சுவாமிகள், மருதேரி பிருகு மகரிஷி அருள் குடிலம், மயிலை குழந்தைவேல் சுவாமிகள்,கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள், தீர்த்தமலை ஜடை சாமியார், ஸ்ரீ சற்குரு சுவாமிகள், பட்டினத்தார், வீர ராகவ சுவாமிகள், ரோம மகரிஷி என்று சித்தர்கள் பட்டியல் நீண்டுகொண்டே இருக்கின்றது.  இந்த நன்னாளில் அனைத்து சித்தர்களின் பொற்பாதம் அடைகின்றோம்.சரி..இனி தரிசனம் காண செல்வோமா?

நம் அலுவலக நண்பர் திரு.பத்ம குமார் அவர்களிடம் நாம் பலமுறை பஞ்செட்டி அகத்தியர் கோயில் பற்றியும் அங்கு  நடைபெறும் சதய பூசை பற்றியும் கூறி உள்ளோம்.ஆனால் அதற்கான நேரம் அமையவில்லை. சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்னர் தீடீரென நண்பர் பஞ்செட்டி செல்லலாமா? என்று கேட்டார். நாமும் சரி என்று கூறிவிட்டு மற்ற வேலைகளில் இருந்தோம். பின்னர் அகத்தியர் வனம் மலேசியா குழுவின் நண்பர் திரு. பாலச்சந்திரன் சென்னை வந்து இருந்தார்.அவரை அழைத்துக் கொண்டு திருஒற்றியூர் சென்றோம்.மறுநாள் காலை பஞ்செட்டி செல்ல வேண்டும். பயணத்தின் போதே குருக்களிடம் அலைபேசியில் தொடர்பு கொண்டு தரிசனம் பற்றி கூறினோம். 

அன்றிரவு நாம் வீட்டிற்கு வந்த போது இரவு மணி 11 நெருங்கி விட்டது. தீபமேற்ற நல்லெண்ணெய் வாங்கிக் கொண்டு, வீட்டில் இருந்த வில்வம்,நெல்லி,அருகு, மஞ்சள்,பசுஞ்சாண விபூதி,சந்தனம்  என எடுத்துக் கொண்டு கிளம்பினோம். காலையில் பஞ்செட்டி அகத்தியர் தரிசனம் பெறப் போவது கண்டு மனம் மகிழ்ந்தோம். நீங்களும் இந்த தரிசனத்தில் மகிழ இருக்கின்றீர்கள்.
தரிசனப் படங்கள் கொஞ்சமே. அதனை மேலே கண்டு தரிசிக்கவும். ஒவ்வொரு அபிஷேகத்திலும் ஒவ்வொரு விதமாக தரிசனம் கண்டோம். அபிஷேகம் முடித்து அலங்காரத்தில் கண்ணில் ஒற்றும் தரிசனம் பெற்றோம்.மிக மிக எளிய பூசை தான். கண்ணுக்கு இனிமையாய் இருந்தது. காதுக்கு இனிமையாய் அகத்தியரின் நாமம் போற்றினோம்.இது போதும் தானே? இன்றைய குருபூர்ணிமா நன்னாளில் நம் குருவின் தரிசனம் நமக்கு கிடைக்க நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும் அன்றோ?

நீர் தான் கதி என்பதை " மதியேது விதியேது கதியுந்தன் பொற்பாதமே " என்று கூறி கூறி களிப்பு உற்றோம். மீண்டும் ஆலயம் முழுதும் ஒருமுறை வலம் வந்தோம். எத்தனை முறை தரிசித்தாலும் இன்னும் இன்னும் என மனம் ஏங்குகின்றது.

அனைத்தும் ஒருங்காய் மேலே இணைத்துள்ளோம். கண்டு கண் குளிரவும். திடீரென இந்த தரிசனம் அமைந்ததால் யாரையும் உடன் அழைக்க முடியவில்லை. அருமையான தரிசனம் வழங்க நமக்கு வாய்ப்பளித்த நண்பர் திரு.பத்மகுமார் அவர்களுக்கு நம் சார்பாகவும், நம் தளம் சார்பாகவும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.அடுத்து மிக மிக முக்கிய அறிவிப்பு இந்த நன்னாளில் தருகின்றோம். வருகின்ற 03/08/2018 அன்று ஏக தின லட்சார்ச்சனை பஞ்செட்டி அகத்தியர் கோயிலில் காலை 8 மணி முதல் இரவு வரை நடைபெற உள்ளது. காலை 6 மணிக்கு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை 9 மணிக்கு  தொடங்கி மத்தியம் 2 மணி வரை, லலிதா சகஸ்ர நாம பாராயணம் மாலை வரை, மாலை 7 மணி முதல் திரு விளக்கு பூசை என ஒரே கொண்டாட்டமாக நடைபெற உள்ளது. வாய்ப்புள்ள அன்பர்கள் கலந்து கொண்டு இறையருளும்,குருவருளும் பெறும்படி வேண்டுகின்றோம். மீண்டும் அனைத்து குருமார்களின் பதமும், பாதமும் பணிகின்றோம்,

                 குரு உயர்வு மதிப்பவர் தம்மை தரத்தினை உயர்த்தி பிறவிப்பயனை நல்கும்.

- அடுத்த பதிவில் இணைவோம்.

மீள்பதிவாக:-

கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் 161 ஆம் ஆண்டு அவதார திருவிழா அழைப்பிதழ் - http://tut-temple.blogspot.com/2018/07/161.html

பாரத்தைக் குறைத்து பரத்தை உணர்த்தும் பரஞ்சோதி பாபா - 7- ஆம் ஆண்டு மகா குருபூஜைப் பேரானந்த வழிபாடு - http://tut-temple.blogspot.com/2018/06/7_27.html

 உன்னுள் உத்தமனைக் காணும் வழி - மஹான் சங்கு சித்தர் அவர்களின் 119 ஆவது குரு பூஜை - http://tut-temple.blogspot.com/2018/06/blog-post_13.html

அருள்மிகு சோமப்பா சுவாமிகளின் 50 ஆம் ஆண்டு குருபூசை விழா அழைப்பிதழ் - http://tut-temple.blogspot.com/2018/06/50.html

என்னை நீ ஆள்வாய் சிவப்பிரகாச இறைவநல் தேசிக மணியே! - http://tut-temple.blogspot.com/2018/06/blog-post_5.html

திருச்சி வரகனேரி பிர்மரிஷி ஸ்ரீ குழுமியானந்த சுவாமிகள் குருபூஜை - http://tut-temple.blogspot.com/2018/06/blog-post_1.html

ஸ்ரீ கண்ணையா யோகி குரு பூஜை - http://tut-temple.blogspot.com/2018/05/blog-post_79.html

மண் உண்ட மகான் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மல்லையா சுவாமிகள் - http://tut-temple.blogspot.in/2018/05/blog-post_89.html

மீண்டும் மீண்டும் நம்மை அழைக்கும் குழந்தைவேல் சுவாமிகள் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2018/05/blog-post_21.html

சித்திரை பூசத்தில் குழந்தைவேல் சுவாமிகளிடம் சரண் அடைவோம் - http://tut-temple.blogspot.in/2018/04/blog-post_21.html

ஜாதகத்தை மாற்றி சாதகமாக்கும் குழந்தைவேலர் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_77.html

 ஜாதகத்தையே மாற்றும் குழந்தைவேலர்... - http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_22.html

 என் கடன் பணி செய்து கிடப்பதே - உழவாரப் பணி - http://tut-temple.blogspot.in/2017/08/blog-post_24.html

உன்னுள் உத்தமனைக் காணும் வழி சாகாக் கல்வி - http://tut-temple.blogspot.com/2017/07/blog-post_4.html

ஓம் அகஸ்த்திய நாதனே - ஸ்ரீ குருமண்டல தெய்வமே !  - http://tut-temple.blogspot.com/2018/03/blog-post_76.html

எந்தையும் தாயும் - கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை அறிவிப்பு 21/05/2018  - http://tut-temple.blogspot.com/2018/05/21052018.html

மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா - கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2018/04/blog-post_22.html

அகத்தியருக்கு ஆயில்ய ஆராதனை -புரட்டாசி -2017- http://tut-temple.blogspot.in/2017/09/2017.html

அகத்திய முனிவரின் பஞ்ச யாக ஷேத்திரம் - பஞ்செட்டி சதய பூஜை அழைப்பு - http://tut-temple.blogspot.in/2018/04/blog-post_74.html

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!! - கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2018/03/blog-post_89.html

கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை - 28/2/2018 - http://tut-temple.blogspot.in/2018/02/2822018.html

மனமது செம்மை யாக அகத்தியர் பூசை தானே - http://tut-temple.blogspot.in/2018/03/blog-post_6.html

இந்த பதிவு பற்றிய உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்...🖌