Subscribe

BREAKING NEWS

31 October 2018

ஐப்பசி மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 7/11/2018

அனைவருக்கும் வணக்கம்.

நம் தளத்தின் மூலம் நம்மால் முடிந்த அளவில்  அறப்பணிகள், சேவைகள்,பூசைகள் என செய்து வருவது அனைவரும் அறிந்ததே. வருகின்ற தீபாவளி பண்டிகையை அருகில் உள்ள ஏதேனும் இல்லத்தில் கொண்டாட உள்ளோம்.இதன் பொருட்டு உதவி வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.மாதம் தோறும் அகத்தியர் பெருமானுக்கு ஆயில்ய ஆராதனை செய்து வருகின்றோம். இது அகத்தியர் பெருமானுக்கு மட்டும் நடைபெறுகின்றது என்று நீங்கள் நினைக்க வேண்டாம். நேரில் வந்து பார்த்தால் தான் தெரியும். இது அனைத்து சித்தர்கள், மகான்களுக்கான பூசை. ஆயில்ய ஆராதனையில் சித்தர்கள் போற்றித் தொகுப்பை நாம் ஓதி வருகின்றோம். இதுவே நம்மை வழி நடத்தி வருகின்றது.

இந்த பயணத்தில் நாம் அடுத்து அடி எடுத்து வைத்தது மோட்ச தீப வழிபாடு. சென்ற ஆடி மாதம் கோலாகலமாக சிறப்பாக கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் ஆலயத்தில் வழிபாடு நடைபெற்றது. இந்த வழிபாட்டில் நமக்கு நேரிடையாக வந்து , முதல் வழிபாட்டை துவக்கி வைத்த அகத்தியர் அடியார்கள் பாதம் தொட்டு வணங்குகின்றோம். இதோ இந்த மாதம் ஐப்பசி மோட்ச தீப வழிபாட்டிற்கு அனைவரையும் இந்த பதிவின் மூலம் அழைக்கின்றோம். இப்போது தான் ஆரம்பித்தது போல் இருந்தது. அதற்குள் ஆடி,ஆவணி,புரட்டாசி என மூன்று மோட்ச தீப வழிபாடு குருவருளால்  முழுமை பெற்றுள்ளது.

அனைவருக்கும் இங்கே பணிவான வேண்டுகோள் ஒன்றை சமர்ப்பிக்கிறோம். மோட்ச தீப வழிபாட்டின் பதிவுகளை, காணொளிகளை பார்த்து யாரும் தாமாக வழிபாட்டினை செய்ய வேண்டாம். குருவருள் இன்றி இந்த வழிபாடு முழுமை பெறாது. அப்படி இந்த வழிபாட்டை மேற்கொள்ள விரும்புபவர்கள் தங்களுக்கு தெரிந்த அருகில் உள்ள ஜீவ நாடியில் குருவிடம் உத்திரவு பெற்று மேற்கொண்டு வழிபாட்டை செய்யலாம். வேறு ஏதேனும் இந்த வழிபாடு சம்பந்தமாக நம்மை தொடர்பு கொள்ளலாம்.

சரி.சென்ற மாத நிகழ்வின் துளிகளை பார்த்துவிடுவோமா? மோட்ச தீபத்திற்கு அகல் விளக்குகள் வாங்கி தயார் செய்யப்பட்ட காட்சி.


இந்த நிகழ்வில் நம்மால் பங்கு கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டு விட்டது. கோயிலுக்குள் சென்று பார்க்கவும் முடியவில்லை. எனவே அனைத்து விதமான முன்னேற்பாடுகளும் செய்து விட்டு, நம் அன்பர்களிடம் சில வழிமுறைகளை கூறி இதனை தொடர்ந்து செய்க என்று கூறி விட்டு,கோயிலின் வெளியே இருந்தோம்.



இந்த முறை புரட்டாசி அமாவாசை என்பதால் எம் வீட்டிலிருந்து தங்கை, குடும்ப சகிதமாக வந்திருந்தார்கள். மேலும் போளூர் உமா அவர்கள். ஆவடி சதீஸ் அவர்கள் என அகத்திய அடியார்கள் புடை சூழ வந்தார்கள். அனைவரையும் கண்டு இன்புற்றோம்.


இதோ..மோட்ச தீப வழிபாட்டிற்கான ஆயத்த ஏற்பாடுகள் ஒவ்வொன்றாக நடைபெற்று வருகின்றதுட.









அன்பர்கள் அனைவரையும் கண்டு இன்புற்றோம். திருவொற்றியூர் கேசவன், பெருங்களத்தூர் ஆதி ஐயா என பட்டியல் நீண்டு கொண்டே சென்றது. வழக்கமாக நம் TUT அன்பர்கள் பரிமளம் அவர்கள் ,சந்திரசேகரன் அவர்கள் , செல்வி  அவர்கள், ராஜகுமாரன் அவர்கள் என அனைவரும் தத்தம் கடமை உணர்ந்து செயலாற்றினார். இதோ.தீபம் தயார் நிலையில் உள்ளது. நமக்கு குருக்களும் வழிகாட்டினார்.சிறிய அளவில் மோட்ச தீபம் பற்றி குருக்கள் கூறிவிட்டு இதோ..நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் மோட்ச தீப வழிபாடு ஆரம்பமாக உள்ளது.


இந்த முறை ஏழேழு விலங்குகளாக மூன்று அடுக்குகளில் விளக்கு வைத்துள்ளோம். ஒவ்வொரு வரிசையும் ஒவ்வொரு விதமாக ஏற்ற உள்ளோம். முதல் வரிசை கோயில் குருக்களையும், இரண்டாம் வரிசை ஆடவர்களையும், மூன்றாம் வரிசை மகளிரையும் வைத்து ஏற்றினோம்.






தீபம் ஏற்றியாகி விட்டது.அடுத்து மந்திர உச்சாடனம் செய்ய உள்ளோம். இம்முறை பித்ரு ஸ்துதி சேர்க்க சொல்லி உத்திரவு என்பதால் மொத்தம் மூன்று மந்திரங்கள் சொல்ல உள்ளோம். இதிலும் மகளிரை இணைக்க சொன்னோம். அதே போல் ஒவ்வொரு மந்திரமாக 108 முறை சொல்லி முடித்தார்கள்.














அடுத்து ஒவ்வொருவராக வந்து, அவர்களின் முன்னோர்களை நினைத்து வேண்டி, அங்கே பூக்கள் தூவி வழிபாடு செய்ய பணித்தார்கள். 21 தலைமுறை முன்னோர்களின் ஆசி வேண்டி நின்ற ஒவ்வொருவரையும் பார்க்கும் போது, இந்த பூமியில் நாம் பிறந்த நோக்கத்தை இவர்கள் அனைவரும் நிறைவேற்றி வருகின்றார்கள் என்பது உறுதியாக தெரிந்தது.

அடுத்து உணவு பரிமாறப்பட்டது.


அனைத்து நிகழ்வுகளும் சிறப்பாக நடந்து கொண்டிருந்தது.மீண்டும் ஒரு முறை நீங்களே பாருங்கள்.





இந்த மோட்ச தீப வழிபாடானது மிக மிக உயர்ந்த வழிபாடு.,இத்தகைய வழிபாட்டை நமக்கு பணித்த அனைத்து குருமார்களின் பாதம் பணிகின்றோம். அதே போல் சென்ற பூசையில் பங்கு கொண்டு, சிறப்பாக நடக்க ஒத்துழைப்பு நல்கி உதவிய அனைத்து அன்பர்களின் பாதம் பணிகின்றோம். இந்த மோட்ச தீப வழிபாடு ஒருவரால் நிகழ்த்தப்படுவதன்று. இது ஒரு கூட்டு வழிபாடு. யாரும் நமக்கு அழைத்து சொல்லவில்லை என்று நினைக்காது தாமாக முன்வந்து உதவுங்கள் என்று வேண்டுகின்றோம்.

இனிவரும் பதிவுகளில் அவ்வப்போது நமக்கு கிடைக்கின்ற செய்திகளை இங்கே பகிர்கின்றோம். சரி..இந்த மாத மோட்ச தீப வழிபாடு பற்றி கீழே கண்டு பங்கு பெறவும். வருபவர்கள் தங்களால் முடிந்த அளவில் நெய் மற்றும் எள்ளு வாங்கி கொண்டு வரவும்.

அன்றைய அமாவாசை அன்னதான சேவை காட்சிகள் இங்கே பகிர்கின்றோம்.







மெய் அன்பர்களே.

நிகழும் மங்களகரமான விளம்பி வருடம் ஐப்பசி மாதம் 21 ஆம் நாள் (07/11/2018) புதன்கிழமை மாலை  5 மணி முதல் கூடுவாஞ்சேரி - மாமரத்து விநாயகர் ஆலயத்தில் அருள்பாலிக்கும் அகத்திய மகரிஷி முன்னிலையில் பித்ருக்களின் ஆசி வேண்டி மோட்ச தீபம் ஏற்றி வழிபாடு செய்ய உள்ளோம். அனைவரும் வருகை புரிந்து முன்னோர்களின் அருளாசி பெறும்படி வேண்டுகின்றோம்.


தொடர்புக்கு : 7904612352/9677267266
tut-temple.blogspot.in
https://www.facebook.com/thedalullathenikalaai/

மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.

மீள்பதிவாக:-

ஆவணி மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - http://tut-temple.blogspot.com/2018/09/blog-post_7.html

முன்னோர்களின் ஆசி பெற மோட்ச தீப வழிபாடு - http://tut-temple.blogspot.com/2018/05/blog-post_15.html

வளங்களை அள்ளித் தரும் மோட்ச தீப வழிபாடு - http://tut-temple.blogspot.in/2018/05/blog-post_29.html

21 தலைமுறை முன்னோர்களுக்காக மோட்ச தீபம் ஏற்றுவோம் - http://tut-temple.blogspot.in/2018/04/21.html

30 October 2018

சிவமலை என்றிடத் சேரும் புண்ணியம் - சிவன்மலை குமரன் தரிசனம்

அடியார் பெருமக்களுக்கு அன்பு வணக்கம்.

சிவன்மலை யாத்திரையில் அன்று மதியம் அன்னசேவைக்காக காத்திருந்தோம். அங்கிருந்து இந்தப் பதிவை தொடர்கின்றோம். முருகன் என்றாலே அங்கு சித்தர்களின் சாம்ராஜ்யம் இருக்கும். பழநி மலை போகரின் கைவண்ணத்தில் உருவானது. அது போல் இந்த சிவ மலை சிவ வாக்கியர் என்ற சித்தரால் உருவானது. சிவ வாக்கியர் முருகனின் உபதேசம் இங்கு பெற்று, இந்தக் கோயிலை அமைத்ததால் அவரது பெயராலேயே சிவ மலை என்றானது. காலப்போக்கில் இது பரவி சிவன் மலை என்றாயிற்று.

புராணங்கள், கல்வெட்டுகள் போன்றவற்றிலும் சிவ மலை என்றே உள்ளது. இந்த மலைக்கும் சிவனுக்கும் தொடர்பு இல்லை. சிவாசலம், சிவராத்திரி, சிவமாமலை. சிவசைலம், சிவநாகம், சிவகிரி எனவும், புலவர்கள் தெளி தமிழ்தேர் சிவமலை, செல்வ சிவமலை, கல்யாண சிவமலை, மகிமை சேர் சிவமலை, தவசு புரி சிவமலை என புகழ்ந்து பாடியுள்ளனர்.

சிவ வாக்கியர் மலர்ந்தருளிய பாடல்கள் பல. அவற்றுள் ஒரு பாடலின் தொடக்கம் இதோ.

 ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை
நாடி நாடி நாடி நாடி நாட்களும் கழிந்துபோய்
வாடி வாடி வாடி வாடி மாண்டுபோன மாந்தர்கள்
கோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே


திரிபுர சம்ஹாரத்தின்போது, சிவபெருமான் வாசுகியை கணையாக வைத்து, மேருமலையை வில்லாக வளைத்தபோது, மேரு மலையின் சிகரங்களில் ஒன்று காங்கய நாட்டில் விழுந்ததாக, சிவமலை குறவஞ்சியில் குறிப்பிடப்பட்டுள்ளது.மலையை சுற்றிலும், அஷ்ட துர்க்கை இருப்பதாக கூறப்படுகிறது. ஆலாம்பாடி வனசாட்சி (காட்டம்மை), பாப்பினி அங்காள பரமேஸ்வரி, காங்கயம் ஆயி அம்மன், வலுப்பூரம்மன், தங்கம்மன், அந்தனூரம்மன், கரியகாளியம்மன், செல்வநாயகி அம்மன் என எட்டு அம்மன்கள் சூழ்ந்துள்ளதாகவும், சிவமலை குறவஞ்சியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதோ நாம் அன்னதானக்கூடம் சென்றோம். நல்ல கூட்டம் இருந்தது.



நம் தளம் சார்பில் அன்னதானத்திட்டத்தில் இணைந்தோம்.




மூன்று முறை உணவு பந்தி நடைபெற்றது. உணவு பரிமாறுபவர் உணவிடும் போதே, உங்களுக்கு தேவையானதை கேட்டு வாங்கி சாப்பிடுங்கள். உணவை வீண் செய்யாதீர்கள். இந்த உணவு பல பேரின் நண்கொடையால் தரப்படுகின்றது என்று கூறிக்கொண்டே உணவு பரிமாறினார்.

மதியம் அப்படியே சிவன் மலை அழகில் ரசித்து விட்டு, மாலை பூசை கண்டோம். இரவு பூசை காண ஆசை தான். ஆனால் போக்குவரத்து வசதி பற்றி நமக்கு சரிவர தெரியவில்லை. எனவே மாலை பூசை முடித்து ஊருக்கு செல்ல திட்டம் போட்டோம். அன்றைய தினம் என் தங்கையும் காலை 11 மணி அளவில் சிவன் மலை வந்திருந்தார்கள். மருமகள்களோடு முருகனின் அருளில் அன்றைய நாள் சென்றதே தெரியவில்லை.

மாலை தரிசனம் முடித்து நம் தளத்திற்காக காட்சிகளை பதிவேற்றினோம்.








                                     கோடி புண்ணியம் தரும் கோபுர தரிசனம்


திருமணத் தடை, குழந்தை பாக்கியம், தொழில் மேன்மை, நோய் பாதிப்பு என அத்தனை பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும் அற்புதமலையாக விளங்குகிறது.

நவக்கிரக சன்னதியை, ஒன்பது முறை சுற்றி, வழிபட்டு வந்தால் எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும், அதிலிருந்து விடுபடலாம்.





எந்த தலமாக இருந்தாலும் அங்கு முதல் வழிபாடு விநாயகருக்கே நடைபெறும். ஆனால் இங்கு முதல் வழிபாடு  முருகருக்கே என்பது தனிச்சிறப்பு ஆகும்.விநாயகப் பெருமானே முருகனை வழிபடுவதாக ஐதீகம் என்று சிவாச்சாரியார்கள் கூறுகின்றார்.


திருக்கோயிலின் கதவுகள் கூட வனப்பில் இருந்தது. எங்கு பார்த்தாலும் முருகன்..எங்கும் முருகன்..எதிலும் முருகன் என்று கண்டோம்.




முருகன் உத்தரவு பெற்று அருகம்புல், மிளகு, கீழாநெல்லிவேர் பூஜைக்காக வைக்கப்பட்டுள்ளது


மீண்டும் ஒருமுறை பிரகாரம் சுற்றி வந்து கொடிக்கம்பத்தை வணங்கினோம்.









        சிவமலை முருகனைச் சுப்பிரமணியர், சிவசுப்பிரமணியர், கல்யாண சிவசுப்பிரமணியர், காங்கயன், கந்தசுவாமி, வேலன், வேலுசாமி, முத்தய்யன், முருகையன், சிவாசலபதி, குகன், சிவாசலவேந்தன், சிவாத்திரிநாதன், வள்ளிமணாளன், கந்தவேள், குமரன், துரைசாமி, மரகதமயூரன் என்று பல்வேறு பெயார்களில் அழைத்துள்ளனர்.

        இப்பெயார்களில் எப்பெயரிட்டு அழைத்தாலும் சுப்பிரமணியர் அதனை மிக உவப்பாக ஏற்றுக்கொள்வார். மலையை வணங்கினாலே சிவன்மலையாண்டவரை வணங்கியபேறு பெறலாம.

        
        496 படிகள் சிவன்மலையில் உள்ளன. கடல் மட்டத்திலிருந்து 400 அடி உயரத்தில் மலை அமைந்துள்ளது. படிக்கட்டில் உள்ள பாலவிநாயகார் கோயிலைப் பழையகோட்டை சின்ன அரண்மனை பார்வதி அர்ஜீனன் அவார்களும், அவார்கள் தாயார் வெளர்ளக்கிணறு மீனாட்சியம்மாள் அவார்களும் 1966 ஆம் ஆண்டு கட்டி வைத்துள்ளார். பதினெட்டாம் படியைச் சத்தியப்படி என அழைப்பார். அங்கு வழக்குகள் தீர்த்து வைக்கப்பட்டுள்ளன. இப்பதினெட்டாம்படி புராணப்படி என்றும் அழைக்கப்பெறும். இங்குதான் சடைச்சியம்மன் வழிபட்டதும், குடியிருப்பதுமாகும் என்று குறவஞ்சியில் கூறப்படுகிறது. இங்கு அர்த்தமேரு அமைக்கப்பட்டுள்ளது அதன்மேல் திருவடிகள் உள்ளன.

அடுத்து சிவன்மலை ஆண்டவர் திருமண காட்சி உங்களுக்காக தருகின்றோம்.








அருமையான தரிசன காட்சிகள் பெற்று இருப்பீர்கள் என்று நம்புகின்றோம்.

வடக்கே தலையும் தெற்கே தோகையும் இருந்தால் தேவமயில் என்றும், வடக்கே தோகையும் தெற்கே தலையும் இருந்தால் அசுர மயில் என்றும் கூறுவர். சிவன்மலையில் தேவ மயிலே உள்ளது.

 சூரியனைப் பார்த்து எல்லா நவக்கிரங்கள் இருப்பதும் இந்தத் தலத்தின் விசேடமாகும். 

  மலைப்படிகளின் வழியாக அன்பர்கள் நடந்து சென்றால் அவர்கள் தங்கி ஓய்வெடுக்கப் பல அழகிய மண்படங்கள் பழையதும் புதியதுமாக உள்ளன. பாத விநாயகர் மண்டபம் பழையகோட்டை மண்டபம் அருளாடிகள் மண்டபம் பழைய கோட்டை சின்ன அரண்மனை மண்டபம் (பால விநாயகர் கோயிலுடன்) சிலம்பகவுண்டன்வலசு வெங்கட்ரமணசாமிக் கவுண்டர் மண்டபம் பொன்னப்ப செட்டியார் வகையறா மண்டபம் சோமசுந்தரக் குருக்கள் மண்டபம் நாலுகால் மண்டபம் வெள்ளக்கிணறு வெள்ளியங்கிரிக் கவுண்டர் வகையரா மண்டபம் காங்கயம் கதிர்வேல் முதலியார் மண்டபம் தாராபுரம் நரசிம்மன் மண்படம் ராமலட்சுமியம்மன் மண்டபம் .போன்ற பல மண்டபங்கள் உள்ளன. இவ்வயைன மண்டபங்களை கொங்குநாட்டுக் கல்வெட்டுக்கள் ~கற்பந்தல்| என்று சிறப்பிக்கிறது.

உள்ளே நுழைந்தால் தெற்குப் பிரகாரத்தில் கைலாசநாதர் ஞானாம்பிகை திருக்கோயில் கிழக்கு நோக்கி இருப்பதைக் காணலாம். நவகன்னியருக்கும், நவவீரர்களுக்கும், இங்கு தவமிருந்த உமாதேவியாருக்கும் கைலாசத்திலிருந்து எழுந்தருளி அருள் கொடுத்தவர் கைலாசநாதர்.




 எனவே இத்தலத்தில் கைலாசநாதர் தொடர்பு மிகப் புராதனமானது. தலபுராணத்தில் சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானைக்கும் முன்னர் கைலாசநாதருக்கும் ஞானாம்பிகைக்கும் வணக்கும் கூறப்படுகிறது. எதிரில் புளியமரம் உள்ளது. கன்னிமூலை விநாயகர் தென்மேற்கிலும், தண்டபாணி வடமேற்கிலும் மேற்குப் பிரகாரத்தில் எழுந்தருளியுள்ளனர். சனிபகவான், நவககிரகக் சன்னதிகளைக் கடந்து கொடிமரம், மயில்வாகக் குறடு, பலிபீடம் கடந்து சென்று சுமுகர் சதேகர் எனும் துவார பாலகர்களைக் கடந்த சுப்பிரமணியரை வணங்கிப் பேறு பெறலாம். கலியுகத்தில் கண்கண்ட கடவுளாய்க் கருவறையில் வள்ளியோடு சுப்பிரமணியர் எழுந்தருளியுள்ளார். பின்னர் சுப்பிரமணியார், வள்ளி தெயவானைத் திருக்கோலத்தை கண்டு வணங்கி வேண்டியவற்றை வேண்டியாங்கு பெற்று வாழ்வாங்கு வாழலாம்.


சென்ற பதிவில் சிவன்மலை பயணம் வேலொடு தான் தொடங்கியது . என்று குறிப்பிட்டோம் வேலோடு தொடங்கிய யாத்திரை மயிலோடு முழுமை பெற்றது. தரிசனம் முடித்து கீழே வந்து அடிவாரம் செல்ல தங்கையோடு கீழே வந்தோம். அப்பப்பா..மயிலின் தரிசனம் கண்டோம்.




வேலோடு தொடங்கிய சிவன் மலை யாத்திரை மயிலோடு முழுமை பெற்றது என்றால்..நம் அனைவருக்கும் முருகன் அருள் முன்னின்று நடத்துகின்றது என்று புரிகின்றதா? அனைத்தும் முருகனுக்கே ..முருகன் புகழ் ஓங்குக.

- அடுத்த பதிவில் மீண்டும் சந்திப்போம்.

மீள்பதிவாக:-

சிவமலை என்றிடத் சித்தியாகுமால் - சிவன்மலை ஆண்டவர் தரிசனம் - http://tut-temple.blogspot.com/2018/10/blog-post_26.html 

இது சிவன் மலை ஆண்டவன் கட்டளை - உத்தரவுப் பெட்டி - http://tut-temple.blogspot.com/2018/06/blog-post_19.html

வல்வினை நீக்கும் வல்லக்கோட்டை முருகா சரணம் - http://tut-temple.blogspot.com/2018/10/blog-post_9.html

சிவன்மலை கந்தன் பாதம் கனவிலும் காக்கும் - http://tut-temple.blogspot.com/2018/08/blog-post_20.html

இது சிவன் மலை ஆண்டவன் கட்டளை - உத்தரவுப் பெட்டி - http://tut-temple.blogspot.com/2018/06/blog-post_19.html

கந்தனுக்கு அரோகரா... ஆடிக் கிருத்திகை தரிசனம் - http://tut-temple.blogspot.com/2018/08/blog-post_7.html
ஆடிக் கிருத்திகை - மாற்றம் அதை தந்திடுவான் மீஞ்சூரான் - http://tut-temple.blogspot.com/2018/08/blog-post_3.html 

திருப்புகழைப் பாடப் பாட வாய் மணக்கும் - http://tut-temple.blogspot.com/2018/06/blog-post_27.html

திருப்புகழைக் கேட்கும் செவி - ஸ்ரீமத் அருணகிரிநாதர் குருபூஜை விழா - http://tut-temple.blogspot.com/2018/06/blog-post_54.html

அழகெல்லாம் முருகனே ... அருளெல்லாம் முருகனே... - http://tut-temple.blogspot.com/2018/06/blog-post_47.html

தேனி சண்முகநாத மலை தரிசனம் (1) - http://tut-temple.blogspot.com/2018/06/1.html

வெற்றி வேல் வீர வேல் - தேனி சண்முகநாத மலை தரிசனம் - http://tut-temple.blogspot.com/2018/05/blog-post.html

சண்முகா சரணம் - http://tut-temple.blogspot.com/2018/05/blog-post_84.html

முருகன் அருள் முன்னிற்க! பங்குனி உத்திரம் 2018 - http://tut-temple.blogspot.in/2018/03/2018.html

முருகன் அருள் முன்னிற்க! - பங்குனி உத்திரம் கொண்டாட்டம் - http://tut-temple.blogspot.com/2018/04/blog-post.html

நால்வரின் பாதையில்... திருப்புகழ் தலங்கள் - http://tut-temple.blogspot.in/2018/03/blog-post_30.html

வேலை வணங்குவதே நம் வேலை! - http://tut-temple.blogspot.com/2018/04/blog-post_2.html